இறுதியில் "அம்மா" விடுதலை?
சொத்துக்குவிப்பு வழக்கினில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பாரட்டக் கூடிய விசயமே...யாரை பாராட்டுவது?
18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தையா?
அல்லது
வழக்கு போட்ட சுப்ரமணிய சுவாமியையா?
அல்லது
வழக்கம் போல் இடையில் நுழைந்து பெயர் பெற்றுக் கொண்ட கலைஞரையா?
அல்லது
தீர்ப்பு கொடுத்ததும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் சத்தம் இல்லாமல் சிறைக்கு சென்று அமர்ந்த அம்மாவையா?
அம்மா நினைத்தால் "அய்யோ, என்னை கொலை பண்ண போறாங்க ன்னு ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம்", எதுவும் இல்லை.
பொதுவான ஒரு கேள்வி மனதில் எழுகின்றது? 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பிற்கு அவர் மீது இத்தனை நடவடிக்கை....நியாயம்தான்!
இன்று சினிமாவில் ஒரு நடிகை ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ. 5 கோடி. பத்து படங்கள் நடித்தால் அவள் பெரும் தொகை 50 கோடி. இப்படி இருக்கும் போது ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த ஒரு பெண்மணி, அதன் பிறகு தீவிர அரசியலில் இருக்கும் போது இந்த 66 கோடி என்பது மிகச் சாதாரண தொகையே.
ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி ஒரு இடத்தில் பதவி வகித்தாலே அவருக்கு அந்த ஊரு வியாபாரிகள் அவருக்கு மரியாதை என்ற பெயரில் மாமூல் கொடுக்கின்றார்கள். இது பத்தாது என்று அந்த அதிகாரியும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்போது வசூலும் செய்து கொள்வார். அப்படி இருக்கும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்ற போது அவருக்கு மரியாதை எப்படி இருக்கும், எப்படி பணம் வரும் போகும் என்று சாதாரண பாமரனும் அறிவான்.
ஒருவரை பற்றி புகார் தெரிவிக்கும் மற்றொருவர் தான் அப்படிப் பட்ட விசயத்தில் ஒழுங்கா என்பதை முதலில் யோசித்து பார்க்க வேண்டும்....
ஆர்டிகிள் 164 இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு முதல்வரின் சம்பளம் 20000 முதல் 30000 வரைதானாம். இதுவரை நம்மை ஆண்ட முதலமைச்சர்களின் சம்பளமும், தற்போது அவர்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளையும் வைத்து பார்த்தால் யார், யார் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று மக்கள் அனைவருக்குமே தெரியும்.
ஒரு சிலர் அந்த முதல்வர் மக்களுக்கு , அரசு ஊழியருக்கும் கொடுப்பார், அவரும் அடித்து கொள்வார்...இன்னொரு முதல்வர் எதுவுமே செய்யமாட்டார் என்று பெருமையாய் பேசிக் கொள்வார்கள்.,
உங்களுக்கு கிள்ளிக் கொடுத்தால் அவர்கள் அள்ளி எடுக்கலாம் என்பது அவர்கள் குறி. நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் போட்டு அவர்கள் அதிகம் சம்பாதித்து கொள்கின்றார்கள்...
66 கோடி அடிச்சதுக்கே 4 வருஷம் ஜெயில், 100 கோடி அபராதம், அப்படீன்னா 1 லட்சம் கோடி அடிச்சதுக்கு எவ்வளவு வருஷம் ஜெயில், எவ்வளவு கோடி அபராதம் ?
ஒரு விஷயம் கவனிக்கணும்.....சுற்றி எட்டு ஆணாதிக்க கட்சிகள்...ஒற்றைப் பெண்மணி....ஒட்டுமொத்த மாபெரும் கட்சியை ஒன்றிணைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார்.
ஆனால் பல வருடங்களாக கட்சியை நடத்தும் கலைஞரால் அண்ணன் தம்பி பிரச்சினையைக் கூட சமாளிக்க முடியவில்லை என்கின்ற போது அம்மாவை தலை வணங்கலாம் தவறில்லை என்றே தோன்றுகின்றது...
ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், மேக்சிஸ் நிறுவனத்தின் பங்கு விவகார ஊழல் என்று அடுக்கிக் கொண்டே செல்லும் போது ஒவ்வொன்றுக்கும் எத்தனை வருடம் என்று கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக 66 கோடி நியாயம் என்று சொல்லவில்லை...அதனை களங்கமில்லாத வாயும், கைகளும் சொல்ல வேண்டும், சுட்டிக் காட்ட வேண்டும் என்பதே எண்களின் கோரிக்கை...
அடுத்தவரை ஊழல்வாதி, சொத்து குவித்திருக்கின்றார் என்று சொல்வதற்கு முன்னால் தனக்கு எவ்வளவு நிதி இருக்கின்றது, எப்படி வருமானம் வருகின்றது என்பதையும் சொல்லி விட்டு சொன்னால் நன்றாக இருக்கும். தன்னுடைய ஆண்டு வருமானம் எவ்வளவு...எப்படி தொலைகாட்சி நிறுவனம் தொடங்கினீர்கள், எப்படி இவ்வளவு இடங்கள் வாங்கினீர்கள் என்று சொன்னால் நாங்களும் அப்படியே எங்கள் தொழிலை விருத்தி செய்வோமே...
கதை திரைக்கதை வசனம் எழுதி இவ்வளவு சம்பாதித்தேன் என்று சொல்லி விடாதீர்கள்...அன்றிலிருந்து இன்று வரை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய எத்தனையோ இயக்குனர்கள் இன்று வரை சாதாரண வருமானத்தில் தான் வாழ்கின்றார்கள்.
யதார்த்தம் எங்களுக்கும் தெரியும்.....நியாயமாக 500 ரூவாய் சம்பாதிப்பவனுக்கு 700 ரூவாய் வரைக்கும் செலவுகள் இருக்கின்றது....
அதுதான் உண்மை....
அம்மையாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எத்தனையோ எதிர்கட்சித் தலைவர்கள் வாழ்த்தும், அனுதாபமும் தெரிவித்து விட்டார்கள்; ஆனால் ஆரம்பத்தில் இருந்து விரட்டிய திமுக இன்று இந்த தீர்ப்புக்கு ஏன் கருத்து சொல்லவில்லை....
நாளைக்கு நமக்கு எந்த ஜெயிலோ என்ற கவலையா? அல்லது வச்ச குறி எக்குத் தப்பாய் போனதை நினைத்து கவலையோ?
எது எப்படியோ? வழக்கை ஜெயலலிதா அம்மையார் சந்தித்து விட்டார்....இப்போது அவருக்கு வாக்குகள் அதிகமாகி விட்டது....
அடுத்தது 2ஜி க்காக நவம்பர் மாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு சராசரி மனிதனாய் நாங்கள்....நீங்களும்?
No comments:
Post a Comment