முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த முயற்சி எடுத்ததாக, செப்., 16ல் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு தேனியில் பாராட்டு விழா நடக்கிறது.
'முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதில் எங்கள் பங்கும் உண்டு' என தி.மு.க., கூறி வருகிறது. இதற்காக தி.மு.க., எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கி ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. செப்., 16ல் தேனியில் நடக்கும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக தேனி அருகே கருவேலன்நாயக்கன்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி இடத்தை தேர்வு செய்தார். விழாவிற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த பாடுபட்டதற்காக ஸ்டாலினுக்கு தேனியில் பாராட்டு விழா. தி மு க முமுரம். இது செய்தி. இதை நினைக்கும்போது பழைய சம்பவம் எனக்கு நினைவு வருகிறது. 1962 தென் சென்னை லோக் சபா இடைதேர்தல். அப்போது தி மு க எதிர்க்கட்சி.. தி மு கவும் பழைய காங்கிரஸ் கட்சியும் போட்டி இட்டன. அண்ணா .சம்பத். நெடுஞ்செழியன் அன்பழகன், கருணாநிதி,,சத்தியவாணிமுத்து,கண்ணதாசன்,,மதியழகன் என் வி நடராசன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு நாஞ்சில் மனோகரன் வெற்றி பெற்றார். வெற்றி விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது .பொதுக்கூட்ட மேடையில் அண்ணா கருணாநிதிக்கு மோதிரம் பரிசளித்தார். சம்பத்தும் கண்ணதாசனும் அண்ணாவை சந்தித்து எல்லோரும் பிரசாரம் செய்தோம் . நீங்கள் கருணாநிதிக்கு மட்டும் மோதிரம் போட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணா சொன்னார். தம்பி நீயும் ஒரு மோதிரம் வாங்கிப்போட சொன்னால் நான் போடமாட்டேன் என்றா சொல்வேன் என்றார். அப்போதுதான் கருணாநிதியின் நரித்தந்திரம் எல்லோருக்கும் புரிந்தது. இப்போது முல்லை பெரியாறு நீர் மட்டத்தை 142 அடி உயர்த்தியதுக்கு ஸ்டாலினுக்கு தேனியில் தி மு கவினர் பாராட்டு விழா எடுக்கின்றனர் என்றதும் எனக்கு பழைய ஞாபகம் வந்தது. அப்பனுக்குப்பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது.
No comments:
Post a Comment