வெளிவரப் போகும் தீர்ப்பு தமிழக முதல்வருக்கு எதிராக இருப்பினும் கூட, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பெரிய அளவில் ஏதும் பாதிப்பு இருக்காது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி ஜான் மைக்கேல் கன்ஹா தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.
1991-96 இல் ஜெயலலிதாவின் ஆட்சி முடிவுற்று, கருணாநிதி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றில் 10 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டாலும், இரண்டு வழக்குகளில் மட்டும் 2000 வது ஆண்டில் கீழ்நிலை நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு மறுபடியும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக அதிகபட்ச மெஜாரிடியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளிலிருந்து மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையில், ஜெயலலிதா நான்கு தொகுதிகளிலிருந்து போட்டியிட கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவையனைத்தும் நிராகரிக்கப்பட்டன, எனினும் கட்சியின் சார்பில் ஜெயலலிதாவையே முதல்வராக முன்மொழியப்பட்டார். பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு, வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர், முதல்வராகப் பதவியேற்க இயலாது என்று கூறிவிட்டது.
இதற்கிடையே முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்பு, 2001 வது வருடத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் 2003 இல் உச்ச நீதிமன்றமும் அவரை அவ்விரு வழக்குகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது.
2003 ஆம் ஆண்டில் அவருக்கெதிராக ஒரே ஒரு வழக்கு மட்டுமே மீதமிருந்தது. அதுதான் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் வருமானத்திற்குப் புறம்பாக சுமார் 66 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்கு, இதுவும் மற்ற வழக்குகளைப் போல 1998 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. 2001 ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியிலிருக்கும் நிலையில், வழக்கு தமிழகத்தில் முறையாக நடக்காது என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம், வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது. வழக்கு தொடுக்கப்பட்டு, பதினேழாண்டுகளான நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட 11 ஆண்டுகளில் பல்வேறு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாறியுள்ள நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகவிருக்கிறது.
இவ்வழக்கில், ஜெயலலிதா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், அவர் உடனடியாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் இழக்க நேரிடும். அதற்கும் குறைவான தண்டனை கிடைத்தால் என்ன நேரிடும் என்பதில் குழப்பமிருக்கிறது. இதே போன்றதொரு வழக்கில், மஹராஷ்டிர சிவசேனையின் சட்டசபை உறுப்பினர் பபன்ராவ் கோலாப், இவ்வருடம் ஜூன் மாதம் தனது பதவியை இழந்தார்.
ஜெயலலிதா, அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர். அவருக்கென்று ஒரு குடும்பமில்லாத நிலையில், தீர்ப்பு எதிர்மறையாக இருந்தால், அவர் 2001 இல் செய்ததைப் போன்று, தனது நம்பிக்கைக்குரியவரை முதல்வராக அமர்த்தி, ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை படைத்தவர்.
அதன்பிறகு, மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்து, தண்டனை குறைப்போ அல்லது விடுதலையோ பெறலாம். ஆனாலும், இவ்வழக்கு தொடர்பிலுள்ள வருமான வரி வழக்கில்தான் அவருக்கு இன்னொரு சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் நிலையும் சரியானதாக இல்லை. கருணாநிதி தலைமையிலான திமுகவும் ஊழல் வழக்குகளால் வலுவிழந்து காணப்படுகிறது. மூத்த மகன் அழகிரி கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். 90 வயதைக் கடந்த கருணாநிதியும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு படைத்தவராகத் திகழும் ஸ்டாலினிடம் கட்சித் தலைமையை ஒப்படைக்க ஆர்வமற்றவராகக் காணப்படுகிறார்.
தமிழகத்திலும், கடந்த மூன்றாண்டுகளாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் நலத் திட்டங்களால், மக்களிடம் ஆட்சியின்பால் பெரிய அதிருப்தி ஏதுமில்லை, அது சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் வெளிப்பட்டது, அதிமுக 37/39 இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போது தமிழகத்தில் ஊழலுக்கெதிராகப் பிரசாரம் செய்யுமளவிற்கு எந்தக் கட்சியும் ஸ்திரமாக இல்லை. தமிழக பாஜகவின் அடிப்படைக் கட்டமைப்பும் திமுக, அதிமுகவை எதிர்க்குமளவிற்கு வலுவானதாக இல்லை. இது தற்போது தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளிலிருந்தே தெளிவாகிறது.
இவ்வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டால், மிகுந்த எழுச்சியோடு 2016 தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவர்; தோல்வியுற்றாலும் கூட, குறைந்தபட்சம் மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைத்து விடுவர். ஊழல் கறை படிந்த மாநிலக் கட்சிகளுக்கு மாற்றாக, நல்ல அரசியல் கட்சிகள் இல்லாததையே இந்நிலை காட்டுவதாக இருக்கிறது.

No comments:
Post a Comment