Saturday, September 27, 2014

சனி பகவான் பற்றி அறிந்துக் கொள்வோம்

தந்தை     :       சூரியன்
தாய்             :       சாயா தேவி
உரிய பால்     :       அலிக் கிரகம்.
உரிய நிறம்     :       கருமை.
உரிய இனம்     :       சூத்திர இனம்.
உரிய வடிவம்     :       குள்ள உயரம்.
உரிய அவயம்     :       தொடை,பாதம், கணுக்கால்.
உரிய உலோகம்     :       இரும்பு.
உரிய மொழி     :       அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம்     :       நீலம்.
உரிய ஆடை     :       கறுப்பு.
உரிய மலர்     :       கருங்குவளை.
உரிய தூபம்     :       கருங்காலி.
உரிய வாகனம்     :       காகம், எருமை.
உரிய சமித்து     :       வன்னி.
உரிய சுவை     :       கைப்பு.
உரிய தான்யம்     :       எள்.
உரிய பஞ்ச பூதம்     :       ஆகாயம்.
உரிய நாடி     :       வாத நாடி.
உரிய திக்கு     :       மேற்கு.
உரிய அதி தேவதை     :       யமன், சாஸ்தா.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் )     :       உபயக் கோள்.
உரிய குணம்     :       தாமசம்.
உரிய ஆசன வடிவம்     :       வில்.
உரிய தேசம்     :       செளராஷ்டிரம்.
நட்புப் பெற்ற கோள்கள்     :       புதன், சுக்கிரன், இராகு, கேது.
பகைப் பெற்ற கோள்கள்     :       சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள்     :       குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு     :       ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம்     :       பத்தொன்பது ஆண்டுகள்.
சனியின் மறைவு ஸ்தானம்     :       லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு     :       ரிஷபம், மிதுனம்.
பகை வீடு     :       கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம்     :       மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம்     :       மேஷம்.
உச்சம் பெற்ற இடம்     :       துலாம்.
மூலதிரி கோணம்     :       கும்பம்.
உரிய உப கிரகம்     :       குளிகன்.
உரிய திசை     :       மேற்கு
மனைவியர்     :       வேஷ்டா, மந்தா, நீலா
மகன்     :       குளிகன்
சகோதிரர்கள்     :       யமன்
வேறு பெயர்கள்     :       சனீஸ்வரன், ஆயுள்காரகன், நீதிமான்
உரிய காரகத்துவம்     :       ஆயுள் காரகன்.

சூரியனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவர் தான் இந்த சனி பகவான். இவர் தோற்றத்தில் குள்ளமானவர். அறிவியல் கூற்றுப் படி, சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள். வியாழனுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு சுமார் 73 ஆயிரம் மைல். பூமிக்கும் சனிக்கும் உள்ள தூரம் 75 கோடி மைலாகும். இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக 1610 பார்த்தார். (குறிப்பு: இந்து மதத்தில் அதற்கு பல யுகங்களுக்கு முன்பே சனியைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளது வியப்பு)

சனிக்கு ஒருகால் கிடையாது என்பார்கள். அவர் நொண்டியாக இருக்கும் காரணத்தினால் அவர் மெதுவாக வலம் வருகிறார். இதனால் இவரை “மந்தன்” என்றும் கூறுவார்கள். சனி நொண்டியானதற்கு ஒரு கதை சொல்வார்கள். இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்கமுடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன.

இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவா30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

சனி பகவான், நீலமணித் தேரில் நீலப் பட்டுத் துணியுடன் காற்றில் பறக்க, தேரை எட்டு கரு நிறக் கழுகுகள் இழுத்துக் கொண்டு வர வான்வெளியில் பவனி வருகிறார் என்பது ஐதீகம். இருகரம் உடைய இவர் வலது கரத்தில் தண்டம் ஏந்தியிருப்பார். இடது கரத்தால் வரத முத்திரை காட்டுவார். தாமரை மலர் போன்ற பீடத்தில், காக்கை வாகனத்தில் அமர்ந்திருந்திருப்பார். சனி பகவானின் மகனாகிய குளிகன் பெயரில் தினமும் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் எது செய்தாலும் விருத்தியாகும் எனவே அந்நேரத்தில் நல்லதே செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...