Sunday, June 25, 2017

முடி திருத்தும் தொழிலாளியிடம் 150 கார்கள்!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆடம்பர சலூன் வைத்து முடி திருத்தும் பணி செய்து வரும் நபர் ஒருவர் சொந்தமாக 150 கார்கள் வைத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள போரிங் மையத்தில் ஆடம்பர சலூன் ஒன்றை நடத்தி வருகிறார் 45 வயதான ரமேஷ் பாபு.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பின்னர், ரூ.3.2 கோடி மதிப்பில் மெர்சடிஸ் மேபேக் எஸ்600 என்ற வெளிநாட்டு சொகுசு காரை இவர் சமீபத்தில் வாங்கியுள்ளார்.
தனது தொழில் வளர்ச்சி குறித்து பேசிய ரமேஷ் பாபு, “எனக்கு 9 வயது இருக்கும்போது என் அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என்னுடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதில் இருந்தே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு வேலைகளை செய்து கொண்டிருந்தபோது, ஒரு சலூனில் முடி திருத்தும் வேலை கிடைத்தது.
அங்கு சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 1994 ஆம் ஆண்டு சொந்தமாக சலூன் வைத்தேன். நான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு முதலில் மாருதி ஆம்னி வேன் ஒன்றை வாங்கினேன்.
நான் பயன்படுத்திய நேரம் போக, மற்ற நேரங்களில் அதை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தேன். வாடகை கார் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததால் மேலும் சில பழைய கார்களை வாங்கி வாடகைக்கு விட்டேன்.
ஒரு கட்டத்தில் என்னிடம் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேர்ந்ததால் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கினேன். இப்போது என்னிடம் 3 ஆடி கார்கள், 10 பி.எம்.டபுள்யூ, 11 மெர்சடிஸ் பென்ஸ், 1 ரோல்ஸ் ராய்ஸ், 3 ஜாகுவார் உட்பட 150 கார்கள் உள்ளன.
இந்த ஆடம்பர கார்களை வாடகைக்கு விட்டு, மாதந்தோறும் பல லட்சங்கள் சம்பாதிக்கிறேன். வெளிநாட்டு தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பெங்களூரு வந்தால் என்னிடம்தான் வாடகைக்கு கார் எடுத்துச் செல் வார்கள்” என்கிறார்.
பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தும் தற்போதும் தமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் முடி திருத்தும் வேலையை தொடர்ந்து செய்கிறார் ரமேஷ்பாபு.......
Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...