Thursday, June 29, 2017

பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால்.

பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால் . . .

பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால் . . .
பப்பாளி பழம் மட்டும்மல்ல‍ பப்பாளி இலையும் மருத்துவத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில்
பைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமி களும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது. எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில், இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல் வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால், ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
பப்பாளி இலையின்சாறு நமது உடம்பிலள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கி றது.
நம் உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களி டம் எதிர்த்துபோராடி, மலேரியா, டெங்கு காய்ச்சல், புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
அன்றாடம் நாம் பப்பாளி இலைச்சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
வயிற்றில்ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை , அலர்ஜி போன்ற சருமபிரச்சனை, ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்

English Summery:
If you Drink Papaya Leaf Juice, It will be cures Allergy, Digestion Problem, Stomach disease, Skin Disease, Period Problem and Diabetic disease etc.,.and also increase blood cells.
Its Save us from Malaria, Dengue Fever, Jaundice and Cancer etc., Kindly consult your doctor before drink 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...