Friday, June 30, 2017

🌸அஞ்ஞானம்🌸

🌺கிடைத்த எதுவும் மகிழ்ச்சி தருவதில்லை. மாறாக ஏதோ ஓன்று கிடைக்கவில்லை என்ற ஏக்கம்தான் எல்லோரையும் கொல்லாமல் கொல்கிறது. துக்கம் பலரையும் பீடித்திருக்கிறது. எப்போதும் துக்கமின்றி இருப்பது தான் உண்மையான ஞானம் என்பது பலருக்கு புரியவே இல்லை.
🍀துக்கத்திற்கு காரணமான நிகழ்வுகள் பெரிதும் வெளியிலிருந்து தான் நம் மீது திணிக்கப்படுகிறது. ஆனால் அதை துக்கமாக எடுத்துக் கொள்வதா இல்லையா என தீர்மானிக்கிற உரிமை நம்மிடம் தான் இருக்கிறது. அதை தான் ஞானம் என்று ரமணர் ராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் புரிய வைக்கிறார்கள். ரமணருக்கும், ராமகிருஷ்ணருக்கும் கடுமையான நோய் தாக்கியபோதும் அது தாங்க முடியாத வேதனை என்று புலம்பவில்லை. கடவுளை சபிக்கவில்லை. மாறாக அவை இறைவன் கொடுத்த ப்ரசாதம் என ஏற்றுக் கொண்டு விட்டார்கள். துக்கம் வெளியில் இருந்து தாக்கினாலும் அதை துக்கமாக அவர்கள் கருதவில்லை.

அவர்களது வித்தியாசமான மனோநிலை அவர்களை துக்கத்திலிருந்து மீட்டு விட்டது. ஆனால் இன்று மனிதர்கள் இதற்கு நேர்மாறாக இருக்கிறார்கள். இயல்பாக நிகழும் சின்ன சின்ன நிகழ்வுகளை கூட தங்கள் அஞ்ஞானத்தால் துக்கமாக்கி கொள்கிறார்கள்.
🌻இன்று நாமோ பாயசமே கொடுத்தாலும் கூட அதில் முந்திரி பருப்பு குறைவாக இருந்தது என்று துக்கம் தொண்டையை அடைக்க வேதனை அல்லவா அடைகிறோம். என்றும் அஞ்ஞானம் துக்கத்தில் சிக்க வைக்கிறது. ஞானமோ அதிலிருந்து விடுவிக்கிறது. துக்கத்தால் நாம் துக்கப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தான் துக்கப்படுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...