Friday, June 16, 2017

குதிரை பேரம் நடந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது : ஸ்டாலின்....

குதிரை பேரம் நடந்ததற்கான வீடியோ ஆதாரத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபையில் காட்டினார்.
அந்த வீடியோ தொடர்பாக மேலும் பல ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். அந்த ஆதாரங்களை தனது அறைக்கு கொண்ட வந்து தருமாறு சபாநாயகர் தனபால் கூறினார்.
எம்.எல்.எல்.,க்களிடம் பணம் பேரம் பேசப்பட்ட வீடியோவிற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதால் குதிரை பேரம் நடைபெற்றது குறித்து விவாதிக்க தற்போது அனுமதி அளிப்பீர்களா என ஸ்டாலின் சபாநாயகரிடம் கேட்டார்.
அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்...
அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முதல் நாளில் இருந்து இது குறித்து பேச நாங்கள் அனுமதி கேட்டு வருகிறோம். அன்று, ஆதாரம் இருந்தால் தாருங்கள் பேச அனுமதி அளிக்கிறேன் என்றார்.
இன்று 3 வது நாளாக ஆதாரத்தை காட்டி, பேச அனுமதி கேட்டால், பேச அனுமதி கிடையாது, அது அவை குறிப்பில் இடம்பெறாது என்று கூறியதால் நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
முதலில் ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்றார்.
அப்போது ஆதாரம் கொடுத்தால், அது ஆதாரமா இல்லையா என்பத பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும் என சபாநாயகர் கூறுகிறார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...