Sunday, June 25, 2017

மரபணு மாற்றப்பட்ட கடுகில் என்ன பிரச்சினை?

நம் நாட்டில் ஆறேழு மாநிலங்களில் சமையலுக்கு கடுகு எண்ணெயே அதிகம் பயன்படுகிறது.
விளைச்சலை அதிகரிப்பதற்காக மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்துகிறோம் என்கிறார்கள்.
கடுகுச் செடியில் ஒரே பூவில், ஆண், பெண் தன்மைகள் இருக்கும். அதில் ஆண் தன்மையைக் குறைத்துச் சூலுற வைப்பதற்காக மரபணு மாற்றம் செய்திருக்கிறார்கள். 
இரண்டு ரகங்களை இயற்கை முறையில் கலந்து, வீரிய ஒட்டு ரகத்தை உருவாக்குவதற்கும், மரபணுவை வெட்டி, ஒட்டி புதிய ரகத்தை உருவாக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மக்களின் உடல் நலத்துக்கு நிச்சயம் அது தீங்கு விளைவிக்கும்.

மரபணு மாற்றப்பட்ட கடுகைத் தடை செய்யக் கோருவதற்கு வலுவான காரணம் இருக்கிறதா?
உணவு உற்பத்தியில் மரபணு மாற்றத்தை அனுமதிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு காரணமாகத்தான், பி.டி. பருத்தியை அனுமதித்த அரசு, பி.டி. கத்தரிக்காயை நிறுத்திவைத்திருக்கிறது. கடுகை அனுமதித்தால் அடுத்தடுத்துப் பல உணவு தானியங்களிலும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்பனைக்கு வரும். இந்திய மரபணு பொறியியலின் தந்தை என்று கருதப்படும் டாக்டர் புஷ்ப பார்கவே இந்தக் கடுகுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்ய 30 வகையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என்றாவது ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். எந்த ஆய்வு முடிவையும் வெளியிடாமல், கடுகை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...