அரசியல் சட்டத்தின் ஷரத்து -58 ன் படி குடியரசுத்தலைவரின் தகுதிகள் என்னவென்றால்
1.இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
2. 35-வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
3.மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
அத்வானிஜி தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார்.
மக்கள் பிரதிநிதிச்சட்டத்தின்படி 2 ஆண்டுக்குமேல் குற்றவழக்கில் தண்டணை பெற்றால் மட்டுமே
மக்கள் பிரதிநிதியை தகுதி நீக்கம் செய்யமுடியும்
வழக்கு பதிவு செய்யப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதையோ பதவி வகிப்பதையோ தடைசெய்ய முடியாது
எந்த வழக்கால் அவரது மக்களைவை உறுப்பினர் பதவியை பறிக்க முடியவில்லையோ
அந்த வழக்கால் அவர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பதையும் தடைசெய்ய முடியாது!
வந்தேமாதரம்!

No comments:
Post a Comment