Wednesday, June 21, 2017

இது எந்த அடிப்படையில்?

கொள்ளைக்குற்றவாளி சசிகலாவை நேற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நாளுமன்ற துணை சபாநாயகர் திரு. தம்பிதுரை யும், லஞ்சக்குற்றவாளி திஹார் தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவை அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவரது அக்காள் மகன் தினகரன் நேற்று சிறைக்கு சென்று சந்தித்தார்.
இதற்கு முன்னர் பலமுறை தினகரன் சந்தித்தாலும், இந்த முறை பாஜக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்து அதிமுகவிடம் ஆதரவு கேட்ட பின்னர் சசிகலாவை தினகரன் சந்திக்க சென்றிருந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த சந்திப்பின் போது தினகரன் நிச்சயம் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாமா மற்றும் அமைச்சர்களின் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை நிச்சயம் சசிகலாவிடம் விவாதித்திருப்பார்.
ஆனால் சசிகலாவை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், சித்தி என்ற முறையில் சசிகலாவை சந்திக்க வந்துள்ளேன். அவரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார். மேலும் குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்தும் எதுவும் ஆலோசிக்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பது குறித்து சசிகலா முடிவு செய்வார் என கூறினார்.
அதே போல ஆதரவு பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும் என தம்பிதுரை கூறினார்
ஆனால் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர் கள் கூட்டத்தில் முடிவு செய்து பாஜக அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி அறிவித்துவிட்டார்.
இது எந்த அடிப்படையில்?
சசிகலாவின் ஆதரவோடுதான் ஆதரவு தெரிவிக்கப்பட்டதா? அல்லது சசிகலா தினகரனை புறக்கணித்து
தன்னிச்சையாக இடைப்பாடி ஆதரவு தெரிவித்தாரா?
இதற்கு பாஜகவை எதிர்ப்பதற்காகவே அதிமுகவின் முகமூடியை அணிந்து கொண்டு தினகரனை ஆதரிக்கும் ஜாதிவெறி யர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...