Saturday, December 29, 2018

" குச்சிகிழங்கு "

குச்சிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்ட காலம் ஒரு பொற்காலம்..!
இன்று பீட்சா,பர்கர்,ஐஸ்கேக், சாக்லேட்கேக் என எண்ணற்ற தின்பண்டங்கள் வந்து விட்டாலும், இந்தியன் கேக் என மக்களால் அழைக்கப்பட்ட குச்சிக்கிழங்கின் சுவைக்கு அவை ஈடாகாது...!
நம் சிறு வயது காலங்களில் வேகவைத்த குச்சிகிழங்கை சூடாக சர்க்கரை தொட்டு சாப்பிட்டது இன்றும் மறக்கமுடியாத ஒரு பொன்னான நினைவாகும்..!
ஏழை,எளிய மக்கள்,நெசவாளர்களின் பசியை அன்று போக்கியது இந்த குச்சிகிழங்கு தான்...!
வேக வைத்த குச்சிகிழங்கை சாலையோரங்களில் சிறுகடைகளில வைத்து விற்பார்கள்...! தொட்டுக்க சட்னியும் தருவார்கள்...!
வறுமைமிகுதியால்

இரண்டு துண்டு கிழங்கு சாப்பிட்டு பசியை போக்கி விட்டு வேலைக்கு சென்றவர்கள் பலர்...! பள்ளிக்குழந்தைகளுக்கும் அன்று காலைஉணவு பெரும்பாலும் குச்சிக்
கிழங்கு தான்..!
வேகவைத்த குச்சிக்கிழங்கை மறுநாள் கடுகு,உளுத்தம்பருப்பு, வரமிளகாய் போட்டு தாளித்து மசாலா கிழங்காய் உண்பர்...! அது தனிச்சுவையாக சூப்பராக இருக்கும்..!
ஞாயிறுக்கிழமைகளில் மாலை வேளைகளில் குச்சிகிழங்கை நன்கு வேகவைத்து சூடான கறிக்குழம்பில் தொட்டு சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் நாவூறுகிறது...!
இன்றைய புரோட்டா,
பாஸ்ட்புக் காலத்தில் குச்சிகிழங்கை காண்பது சாப்பிடுவது அரிதாகி விட்டது என்றாலும்
அன்று தமிழர்களின் வாழ்வோடு இணைந்திருந்த குச்சிக்குழங்கை என்றும் மறக்க இயலாது...!
நீண்ட நாட்களுக்கு இன்று சூடாக வேகவைத்த குச்சிகிழங்கை சர்க்கரை தொட்டு சாப்பிட்ட போது, மனதில் சிறுவயது குச்சிகிழங்கு ஞாபகங்கள் தோன்றியது ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது...!
Image may contain: fruit and food

எதிர்பார்பில்லாத என்ன உறவு இது...

எதற்காகவும் எளிதில் கலங்காத, உணர்ச்சி வசப்படாத ஆண்கள், திருமணத்திற்கு பின்பு மிகவும் பலவீனமாகி விடுகிறார்கள் மனதளவில்..!!
....
100% உண்மை.
ஆனால் இந்த நாட்டில் 80% பேர் தெரிந்தே தவறுகளை செய்கிறார்கள்.
இங்கே வட்டி கடைக்காரன் மட்டும் தவறு செய்யவில்லை.
கொள்ளை, கொலை,பெண்களை ஏமாற்றுபவன்,மோசமான அரசியல்வாதி என்று பல பேர்.
இவர்களை எல்லாம் எப்போது களையெடுப்பது.
இங்கே நியாயம் பேசுபவர்கள் பலபேர்.
இதைத்தான் செய்கிறார்கள்.
....
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குணம்.
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்குக் குணம்.
ஆற்றில் இறங்குவோரைக் கொன்று இரையாக்கல் முதலைக்குணம்.
ஆனால் இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா....
....
மொத நா, கணவன், அப்பா மற்றும் தாத்தா.
அப்பறம் தான் மத்த எல்லாம் என் கடவுள் கூட.
எனக்கு ஒரு கஷ்டம் நா அது வரதுக்கு முன்னாடி அவங்க எல்லாரும் வந்து நிற்பாங்கா.
சும்மா சொல்லல.
அவங்க பேச்சு , அந்த குணம் , அந்த பாசம் , அந்த அக்கறை , அந்த முகம் ... என்னக்குன்னு கிடைச்சவங்க.
என் உயிரை விட மேலானவங்க...
....
கற்பனையில் நீ என்றும் எனக்கு நல்லவனே;
ஆகையால் நிஜத்தை நான் நம்புவதாய் இல்லை.
உன் நிஜம் உன்னைப் போன்ற குணம் கொண்டவர்களுக்கு மட்டுமே உகந்தது...
எனக்கல்ல...
....
நீ அன்பு காட்டினா என்ன
காட்டலைனா என்ன
எனக்கு உன் குணம் பிடிச்சிருக்கு
உன்னையே பிடிச்சிருக்கு
உன்கிட்ட எப்பவும் அன்பா தான் இருப்பேன்னு சொல்லுறது
என்ன மாதிரியான டிசைன் இது எதிர்பார்பில்லாத என்ன உறவு இது...
....
இதே தாங்க...
இப்புடி தான் ஆரம்பிப்பாங்க...
அப்பால அவன் சுயரூபம் தெரியும்...
உங்கள யாருன்னே எனக்கு தெரியாது.. ஆனா அவன பத்தி நல்லா தெரியும்..
என் ப்ரண்டு கிட்ட தப்பா நடந்திருக்கான்.. இன்னும் பலரிட்ட..
நம்பினா நம்புங்க..
இல்ல
உங்க இஸ்டம்..
பார்த்து இருந்துக்குங்க..
....

திரு. கிஷோர் கே சாமி அவர்கள் பதிவு...நன்றி,....

ஈ.வெ.ராமசாமி சேலத்தில் நடத்தியது
போல் சென்னையிலும்
ஒரு ஆபாச ஊர்வலம்
நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால்
எழுதப்பட்ட கட்டுரை இது.
இதை தொடர்ந்து
அந்த ஆபாச ஊர்வலம்
கைவிடப்பட்டது.
*(கவிஞர் கண்ணதாசனின்*
*எண்ணங்கள் ஆயிரம்*
*என்ற நூலிலிருந்து!)*
நான் ஒரு இந்து.
இந்து என்பதில் நான்
பெருமைப்படுகிறேன்.
நான் எல்லா மதத்தினரையும்
மனமார நேசிக்கிறேன்;
ஆனால் இந்துவாகவே
வாழ விரும்புகிறேன்.
நான் கடவுளை நம்புகிறேன்;
அவனைக் காட்டியவனைப்
போற்றுகிறேன்;
அந்தக் கடவுளைக் கல்லிலும்,
கருத்திலும் கண்டு
வணங்குகிறேன்.
ஆன்மா இறைவனோடு
ஒன்றிவிடும்போது,
அமைதி இருதயத்தை
ஆட்சி செய்கிறது.
நாணயம், சத்தியம்,
தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்க்கையை
இருதயம் அவாவுகிறது.
பாதகங்களை, பாவங்களைக்
கண்டு அஞ்சுகிறது.
குறிப்பாக ஒரு இந்துவுக்குத்
தன் மத அமைப்பின்
மூலம் கிடைக்கும் நிம்மதி,
வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
கடைசி நாத்திகனையும்,
அது ஆத்திகன் என்றே
அரவணைத்துக் கொள்கிறது.
என்னை திட்டுகிறவன்தான்
அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்;
ஆகவே அவன்தான் முதல் பக்தன்”
என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தைப்போல்
சகிப்புத்தன்மை வாய்ந்த மதம்
உலகில் வேறு எதுவும் இல்லை .
நீ பிள்ளையாரை உடைக்கலாம்;
பெருமாள் நாமத்தை அழிக்கலாம்;
மதச்சின்னங்களை கேலி செய்யலாம்;
எதைச் செய்தாலும் இந்து
சகித்துக் கொள்கிறான்.
ஏதோ பரம்பரையாகவே
பகுத்தறிவாளனாகப் பிறந்தது
போல் எண்ணிக் கொண்டு,
பாத்திரத்தை நிரப்புவதற்காகவே
சாஸ்திரத்தைக் கேலி செய்யும்
பகுத்தறிவுத் தந்தைகள்
இஸ்லாத்தின் மீதோ,
கிறிஸ்துவத்தின் மீதோ
கை வைக்கட்டும் பார்க்கலாம்.
கடந்த நாற்பது வருசங்களில்
ஒரு நாளாவது அதற்கான
துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!
பாவப்பட்ட இந்து மதத்தை
மட்டுமே தாக்கித் தாக்கி,
அதை நம்புகிற அப்பாவிகளிடம்
‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும்
‘பெரிய ‘ மனிதர்களைத்தான்
நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற நாத்திக வாதம்,
அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’
என்பதை அறியாமல்,
வாழ்கையையே இழந்து நிற்கும்
பல பேரை நான் அறிவேன்.
பருவ காலத்தில் சருமத்தின்
அழகு மினுமினுப்பதைப் போல்,
ஆரம்ப காலத்தில் இந்த
வாதத்தைக் கேட்டு
ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின் ‘மேக் அப்’ பைக்
கண்டு ஏமாறுகிற சராசரி
மனிதனைப்போல்,
அன்று இந்த வாதத்தைக் கேட்டு
ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
அந்த கவர்ச்சி எனக்கு
குறுகிய காலக் கவர்ச்சியாகவே
இருந்தது இறைவனின் கருணையே!
என்னை அடிமை கொண்ட
கண்ணனும், ராமனும்
இன்று சந்திர மண்டலத்துக்குப்
பயணம் போகும் அமெரிக்காவையே
அடிமைக்கொண்டு,
ஆன்மீக நெறியில் திளைக்க
வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை விடவா
ஈரோடு பகுத்தறிவில்
முன்னேறிவிட்டது?
வேண்டுமானால்
‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது
என்று சொல்லலாம்.
ஆளுங் கட்சியாக
எது வந்தாலும்
ஆதரித்துக் கொண்டு,
தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக்
காட்டிக் கொண்டு,
எது கொடுத்தாலும் வாங்கிக்
கொண்டு வாழ்கையை
சுகமாக நடத்துவதற்கு,
இந்த நாத்திக போலிகள்
போட்டிருக்கும் திரை,
பகுத்தறிவு!
உலகத்தில் நாத்திகம்
பேசியவன் தோற்றதாக
வரலாறு உண்டே தவிர,
வென்றதாக இல்லை.
இதை உலகமெங்கும்
இறைவன் நிரூபித்துக்
கொண்டு வருகிறான்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.
இந்த சீசனில் வாழ்ந்து
கொண்டிருக்கும் சில மனிதர்கள்
கோவில்களுக்கு முன்னால்
பகுத்தறிவு விளையாட்டு
விளையாடிப் பார்க்கலாம்
என்று கருதுகிறார்கள்.
இதை அனுமதித்தால்,
விளைவு மோசமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன்
கோவிலுக்கு போக வேண்டாம்.
நம்புகிறவனை தடுப்பதற்கு
அவன் யார்?
அப்பாவி இந்துக்கள்
பேசாமல் இருக்க இருக்க
சமுதாய வியாபாரிகள்
கோவிலுக்கு முன் கடை
வைக்கத் தொடங்குகிறார்கள்.
வெள்ளைக்காரனின் கால்களை
கட்டிப்பிடித்துக் கொண்டு
‘போகாதே போகாதே என் கணவா ‘
என்று பாடியவர்களுக்கு
நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?
நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு
தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?
தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு
நாணயம், நேர்மை இவற்றின்
மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?
இந்த நாலரை கோடி (அன்று)
மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து
எடுத்தாலும், நாலாயிரம்
நாத்திகர்களைக் கூட காண முடியாது.
பழைய நாத்திகர்களை
எல்லாம் நான் பழனியிலும்,
திருப்பதியிலும் சந்தித்துக்
கொண்டிருக்கிறேன்.
*-கவியரசு கண்ணதாசன்*

கண் பார்வை திறன் அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்:-

#பயிற்சி1
இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். வெளிச்சம் குறைவான இடங்களில் இவ்வாறு பயிற்சி செய்தல் நல்லது.

#பயிற்சி2
கண்களை இமைத்தல், கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. கண்களை சீரான முறையில் இமைத்து வந்தாலே நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
#பயிற்சி3
உற்று நோக்கும் பயிற்சி, கணினியில் வேலை செய்பவர் பலர் இரண்டடி தூர இடைவேளையை மட்டுமே உற்று நோக்கி நாள் முழுதும் வேலை செய்வதால், தொலை தூர பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எனவே, 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது, ஏதேனும் தொலைதூர பொருள்களை உற்று நோக்கி பயிற்சி செய்வது அவசியம்.
#பயிற்சி4
கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள். பின் 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வளியுங்கள். இது, கண்களுக்கு ஏற்ப அழுத்தத்தை குறைக்க உதவும்.
#பயிற்சி5
லைசன்ஸ் வாங்க உங்கள் வாகனத்தில் பெரிய "8" போட்டதைப் போல, நீங்களே உங்கள் கண் முன்னே பெரிய எட்டு உள்ளதை போன்று பாவித்து, கண்களாலே எட்டு போட்டு பயிற்சி செய்யுங்கள்.
#பயிற்சி6
ஜூமிங் (zooming) பயிற்சி, உங்கள் விழிகளுக்கு அருகாமையில் இருந்து தூரம் வரை ஏதேனும் நகரும் பொருளை உற்று நோக்கும் பயிற்சி. உதாரணமாக, கைக் கட்டை விரலை, முகத்திற்கு அருகாமையில் இருந்து தூரம் வரை நகர்த்தி உற்று நோக்குதல்.
#பயிற்சி7
அதிகாலை நடைப்பயிற்சி, அதிகாலை சூரிய ஒளி மிகவும் நல்லது, புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இது கண்களை அழுத்தமின்றி, இலகுவாக உணர உதவும்.
#பயிற்சி8
கண்ணாடிகளை சார்ந்து இருக்க வேண்டாம், இது உங்கள் கண் பார்வையை அதிகரிக்க ஒரு போதும் உதவாது, நல்ல உணவும், பயிற்சிகளையும் சீரான முறையில் மேற்கொள்ளுங்கள்.

✋குலதெய்வம்🔔🏛

நான் பார்த்த பல வீடுகளில் இவர்கள் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் போய் பார்த்தால் அவர்கள் வீடுகளில் ஏகாபட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருக்கிறார்கள்.
உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைவருக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும். அதனால் உங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது.

சில வீடுகளில் கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வாங்கி வந்து மாட்டிவைக்கிறார்கள் அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது.
பல வீடுகளின் பல சாமி போட்டோ வைத்து இருக்கும் வீடுகளில் எந்த ஒரு தெய்வத்தின் அருளும் இருக்கவில்லை. நான் பார்த்த வரையில் குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும்போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது.
குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் உங்களால் முன்னேற்றம் காண்பது என்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.
பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள் உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். முதலில் நீங்கள் இதை செய்யும் போது நீங்களே சிரிப்பீர்கள் ஆனால் நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.
பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்பம் நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்படும்.
அப்புறம் மறந்திடாமல் வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசனை வரும் படி வைத்துக்கொள்ளுங்கள்.
அமாவாசை குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது
அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை🔔🏛

ருத்திராக்ஷம் ஏன் அணிய வேண்டும் ?

சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட் ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது.
சூரிய அம்சம் பெற்ற வலது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பன்னிரண்டு ருத்ராட்ச மரங்களும், சந்திர அம்சம் பெற்ற இடது கண்ணிலி ருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பதினாறு ருத்ராட்ச மரங்களும், அக்னி அம்சம் பெற்ற நெற்றி கண்ணி லி ருந்து விழுந்த கண்ணீரில் பத்து ருத்ராட்ச மரங்களும் தோன்றின.
இடது கண் நீரில் தோன்றிய ருத்ராட்சம் வெண்மை நிறத்துடனும், வலது கண் நீரில் தோன்றிய ருத்ராட்சம் பழுப்பு நிறத்துடனும், நெற்றி கண்ணிலி ருந்து தோன்றிய ருத்ராட்சம் கருப்பு நிறத்துடனும் இருப்பதாக ஐதீகம்.
தாவர வகைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மின்சார சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டது, ருத்ராட்ச மணிகளில்தான் என்பது கவனிக்கத்தக்கது.
அதிர்வுகளை அறியலாம்
ருத்ராட்சத்தின் மேலாக குறுக்குவாக்கில் கோடுகளும், அதன் நடுவில் இயற்கையாகவே அமைந்த துளையும் இருக்கும். அதன் மேல் இருக்கும் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தெய்வாம்சம் சிறப்பாக வெளிப்படுவதாக கண்டறிந்துள்ளார்கள்.
ஒரு பொருளில் உள்ள மங்கலகரமான அதிர்வுக ளை, ருத்ராட்சம் மூலமாக எளிதாகக் கண்டறிய இயலும். அதாவது 27, 54 அல்லது 108 எண்ணிக்கை கள் கொண்ட ருத்ராட்ச மாலையை, குறிப்பிட்ட பொருளுக்கு மேலாக பிடித்தால் அது வலப்புறமாக அதாவது கடிகாரமுள் சுழலும் திசையில் சுழன்றால், அப்பொருளானது நல்ல அதிர்வுகளைப் பெற்றிருப் பதாகக் கருதலாம்.
அதற்கு மாறாக இடப்புறமாக, அதாவது கடிகாரச் சுற்றுக்கு எதிர்ப்புறமாகச் சுற்றினால், அந்த பொருளில் நல்ல அதிர்வுகள் இல்லை என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில், ருத்ராட்ச மணிகளை அணிவது, ஆன்மிக காரணங்களுக்காக என்று இல்லாமல், உடல் நலம் சார்ந்தும் இருக்கிறது. அவற்றில் இருக்கும் காந்த அலை இயக்கமானது அணிந்திருப்பவரின் உடல் இயக்கத்தோடு ஒன்றுபட்டு செயல்படக்கூடியது.
ருத்ராட்ச மாலையை 3 முதல் 6 மாதங்கள் அணிந்திருந்தால் உடலுக்கு பொருந்தக்கூடிய ஈர்ப்பு மண்டலம் கொண்டதாகவும், உடலின் அதிர்வெண்களுக்கு தக்கவாறும் மாறி விடும்.
நன்மைகள்:
சிவபெருமானின் பூரண அருளை தரக்கூடியது.
குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும்.
நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்க ளும் ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.
மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு உடலியக்கத்தில் துடிப்பான செயல் திறனையும் உண்டாக்கும்.
சுவாச கோளாறுகள் கட்டுப்படும், திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறன் மேம்படும்.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
இரத்த அழுத்தம் சம்மந்தமான நோய்களை நீக்கும்.
இது ஒரு காந்த ஆற்றலை உள்ளடக்கியது

Friday, December 28, 2018

மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை. ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில் இருக்கும் சமஸ்க்ரிதம் ஆரிய மொழி.
ஆனால், 200 ஆண்டுகள் கூட ஆகாத உருது திராவிட மொழி.
தமிழ் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு.
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹாவையும், அராமிக் / ஹீப்ரு மொழிக் கடவுள் ஏசுவையும் ஏற்பது மதச்சார்பின்மை
ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை.
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை.
புனித பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன;
ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் விடுமுறை நாட்கள்.
பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் ; மூனு கல்யானம் பண்ணாலும் புனித கோட்பாடு.
இரு நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், அறுநூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த இஸ்லாமியரும் தமிழர்கள்;
ஆனால் ஐயாயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்.
வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மத வெறி மனிதர்கள்.
ஆனால், வீட்டில் உருது பேசிக்கொண்டு வெளியில் தமிழ் பேசி நடிப்பவர்கள் மத சார்பற்றவர்கள்.
ஒரு ஹிந்துத்தமிழன் சபரி மலை, காசி, திருப்திக்கு சென்றால் அது தமிழனுக்கு செய்யும் துரோகம்.
ஆனால், அதே ஹிந்துக்களின் வரிபனத்தில் முஸ்லிம்கள் விமானம் ஏறி மெக்கா சென்று வந்தால் அது புனித பயணம்.
எங்காவது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால் அது மத பயங்கரவாதம்.
ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரகணக்கான அப்பாவிகளை கொத்து கொத்தாக கொன்றால் அது புனித போர்.
வீட்டில் வேட்டி கட்டி பொங்கலை கொண்டாடும் ஹிந்து ‘பார்பனீயத்தின் அடிமை’.
அனால், வீட்டில் லுங்கி கட்டி ரம்ஜான் கொண்டாடுபவனும்,
கேக் வெட்டி கிறிஸ்மஸ் கொண்டாடுபவனும் ‘திராவிடத்தின் திலகங்கள்’.
சாதியை ஒழிக்க, சமூக நீதி நிலைக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு.
ஆனால், பல நூறு ஆண்டுகளாக ஹிந்துக்களை ஆண்டு அவர்கள் மீது ஜசியா வரி போட்ட இஸ்லாமியர்களுக்கும் இட ஒதுக்கீடு தருவது மத சார்பின்மை.
ஒரு கடவுள் கொள்கையுடைய மதம் உயர்ந்தது.
ஆனால், அந்தக் கொள்கையை உள்ளடக்கிய (த்வைதம்) இந்து மதம் கேவலமானது.
சக்தியூட்டப்பட்ட அதிர்வுகளை தாங்கி நிற்கும் விக்ரகங்களை வணங்கினால் மூட நம்பிக்கை.
ஆனால், விமானத்தில் போய் வெற்றிடத்தை வணங்கி வந்தால் அது புனிதமானது.
மும்பையில் எங்காவது ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு மறுக்கப்பட்டால் அது மத வெறி.
ஆனால் கைராணாவில் (உ.பி) 300க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் முஸ்லிம்களால் விரட்டப் பட்டால் அது மத சார்பின்மை.
மாட்டுக் கறி திருடிய முஸ்லிம் ஒருவன் இறந்து போனால் அவன் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல், �40 லட்சம் மதிப்புள்ள வீடு, குடும்பத்தினருக்கு அரசு வேலை தருவது மத சார்பின்மை.
ஆனால், பசு வதையை தடுக்கச் சென்ற ஒரு ஹிந்து கொல்லப் பட்டதற்கு நீதி கேட்டால் அது மத வெறி.
பெரும்பான்மை மக்களாக வாழும் ஹிந்துக்கள் தெய்வங்களாக வணங்கும் ராமன் மற்றும் கிருஷ்ணன் பிறந்த நாட்களுக்கு அரசு விடுமுறை கேட்டால் அது மத வெறி.
ஆனால், வந்தேறி மதங்களைத் தோற்றுவித்த மொஹம்மது மற்றும் யேசுவின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிப்பது மத சார்பின்மை.
இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி மனிதர்.
ஆனால், இவைகளை படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால் நீங்கள் மத சார்பற்ற மனிதர்
2000 / 1000 வருடத்திற்கு முன்னால் தோன்றிய மதம் உயர்வானது.
ஆனால், 40000 வருடத்திற்கும் மேலான கலாச்சாரம் கேவலமானது.
நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்தால் அது மத வெறி.
ஆனால், கழுத்தில் சிலுவை, தலையில் குல்லா அணிந்தால் அது மத சார்பின்மை.
ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன.
ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும் ஒட்டகங்களும் போற்றப் படுகின்றன.
ஒரு இந்து தாய்மண்ணை வணங்கி 'வந்தே மாதரம்' சொன்னால், அவன் மத வெறியன்.
ஆனால், ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் தமிழன்.
மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை.
ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.
மத உணர்வுகளை புன்படுதுகிறோம் என்று தெரிந்தும் பலமுறை 'கலை' என்ற பெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால், அது மத வெறி.
ஆனால், முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்கள் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால், அது மதச் சார்பின்மை.
விழிப்புணர்வின்றி மதம் மாறி சென்றவர்களை தாய் மதத்திற்கு திரும்ப அழைத்தால் அது மத வெறி.
ஆனால், 100 கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று ஒவேசி பேசினால், அது மத சார்பின்மை.
கோவில்களில் சமஸ்க்ரிதத்தில் மந்திரம் ஓதினால் அது பார்பனீயம்.
ஆனால், ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் அது திராவிடம்.
குதிரையின் காலை வெட்டினால் அது மதவெறி.
ஆனால், கொத்தாக பலரை கொன்றால் அது மத சார்பின்மை.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமனின் பிறந்த இடமான அயோத்யாவில், 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டிற்குள் நுழைந்த வந்தேறி இஸ்லாமியன் பாபர் கட்டிவைத்த மசூதியை இடித்தால், அது இந்துக்களின் மத வெறி.
ஆனால், அந்த இஸ்லாம் தோன்றிய 'உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும்' சவுதி அரேபியாவில் மற்ற மதங்களுக்கு (நாத்திகம் உள்பட) 100% தடை போடுவது 'அமைதி மார்கத்தின்' அன்பு வழி.
பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப் படுவதை எதிர்த்து போராடினால் அது மத வெறி.
ஆனால், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மத சார்பின்மை
எங்கோ ஒரு ஹிந்து கோவிலில் பெண்கள் நுழைய தடை இருந்தால், அது ஹிந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல்.
நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் நவ துவாரங்களை மூடிக் கொண்டிருப்பது மத சார்பின்மை.
வருடத்திற்கு ஒரு முறை நிகழும் பட்டாசு வெடிகளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சமூகத்திற்கு எதிரானது.
ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கில் கொடூரமாக கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்கள்.
அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன்.
ஆனால், நாட்டை சீரழிக்கும் தனி சிவில் சட்டம் வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவன்.
இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி மனிதர்.
ஆனால், இவைகளை படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால் நீங்கள் மத சார்பற்ற மனிதர்.

நானும் ஆதாரம் இல்லாம தாண்டா சொல்லுறேன்....

கோவாலு பொண்டாட்டி ஓடி போய்ட்டாளம்.....
என்னாது வைகோ பொண்டாட்டி ஓடி போய்ட்டளா ?
இல்லடா, மஞ்ச பத்திரிகை கோவாலு பொண்டாட்டிடா....
ஓஓஓஓ, மீசைக்காரன் பொண்டாட்டியா ?
இன்னாடா சொல்லுறே, மீசை கொடுமை தாங்காம போய்ட்டாளா ?
ஓட்டுனா் கூட ஓடிட்டாளாம் ?
எங்கடா போனாளாம் ?
நான் என்னடா சன்டிவியும்-நக்கீரனும் சோ்ந்து நித்தியானந்தா சாமி ரூம்ல கேமரா வச்சது போல வச்சாடா பாா்த்தேன்....
கவா்னருக்கும்-பேராசிரியா் நிா்மலாதேவிக்கும் தொடா்புன்னு ஆதாரமே இல்லாம எழுதுனது போல...
நானும் ஆதாரம் இல்லாம தாண்டா சொல்லுறேன்....
அது உண்மையா பொய்யான்னு சன்நீயூஸ்ல விவாதம் வச்சாலோ !
நக்கீரன்ல கவா்ஸ்டோரி போட்டா தான்டா உண்மை தெரியும்....
அதுவரை நாமளும் சொல்லுவோம்,
கோவாலு பொண்டாட்டி ஓடிட்டாளாம்.........
Image may contain: 2 people

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்.


1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.

காலபைரவர்...

இன்று தேய்பிறை அஷ்டமி : கால பைரவர் வழிபாடு சிறப்பு தரும் !!
தேய்பிறை அஷ்டமி
🌜 அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது, தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.
🌜 அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.
🌜 தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளை, அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார்.
ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் :
🌜 நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
🌜 நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
🌜 ஸ்ரீபைரவருக்குப் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
🌜 இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் :
🌜 தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.
🌜 இவர்களே செல்வத்துக்கு அதிபதி. மஹா விஷ்ணு, மஹா லட்சுமி, குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
🌜 ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜெபிக்க வேண்டும். அவ்வாறு ஜெபித்தால், பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீசொர்ண பைரவரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் :
💫 வர வேண்டிய பணம் வந்துவிடும்.
💫 தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
💫 வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
💫 சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
💫 வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
💫 அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
💫 பணம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ

Thursday, December 27, 2018

ஓம் சுவர்ணாகர்ஷண பைரபரேபோற்றி.

நாளை 29/12/2018 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி .பைரவரை வழிபட மறக்காதீர்கள் !
ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் பைரவர் வழிபாட்டு பாடல்!
நல்லதே நடக்க பைரவர் துணை நிற்பார் ! வேணும் வைரவமூர்த்தி துணை .
தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.

சித்த மருந்து...

40 வயது ஆனதும் நோய் நெருங்காமலிருக்க இந்த பொடி ஒரு ஸ்பூன்னை உணவில் சேர்த்து சாப்பிடுங்க.
சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது.
இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.
சுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாம் இந்த பதிவில் பார்ப்போம்.
நோயில்லாத வாழ்வு :
வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.
வயிற்றுப் பூச்சிகள் அழிய :
சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.
மூட்டு வலி:
மத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.
கபம் கரைய :
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை னீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்
சுக்குக் காபி :
சுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.
விஷக்கடிகள் குணமாகும் :
தேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்.
தீராத தலைவலிக்கு :
தலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால், நீரை வற்றச் செய்யும் சிறப்பை சுக்கு பெற்றுள்ளது. தலைவலிக்கு இது சிறந்த பலனைத் தரும்.
அஜீரணப் பிரச்சனை :
1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.
இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.
வாய் துர் நாற்றம் :
சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் குணமாகும்.
வாய்வுபிடிப்பிற்கு :
சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

இது சத்தியம்....

நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.
ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். ‘என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அந்த ஞானி.
அதற்கு அந்தச் சீடன், ‘நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.
‘சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு’ என்று கூறினார் ஞானி.
மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன்.
இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன்.
அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார்.
மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.
ஞானி கூறினார், ‘நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை’ என்றார்.
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன்.
‘உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.
நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

தனிமையிலே இனிமை காண முடியுமா..?

இன்று ஒரு பெரிய நபரோடு பேசிக் கொண்டிருந்தேன்.அவர் சொன்னார் கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது .அது ஒரு டீ எஸ்டேட்.
அங்கு செல்போன் வேலை செய்யாது.நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம்
இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது.வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.
நான் சொன்னேன் எனக்கு இது சரிப்பட்டு வராது.இதை நான் விரும்புவதும் இல்லை என்றேன்.
அதன் காரணத்தை சொல்கிறேன்..
நம்மை சுற்றி இருப்பவர்கள் யார் யார்.
முதலில் மனைவி.
பிறகு பிள்ளகைள்
அடுத்து உறவுகள்.
பின் நன்பர்கள்.
பின்பு வேலையின் நிமித்தம் தொடர்பில் உள்ளவர்கள்.
அதன் பின் முற்றிலும் தெரியாதவர்கள் அதாவது கடைவீதியில் நடப்பவர்கள் போல அறிமுகம் இல்லாதவர்கள்..
இந்த உறவுகள் அற்புதமானவை..மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்.
இல்லாவிட்டால் எதாவது சண்டையாவது போடுங்கள்.பின்பு சமாதனம் ஆகி உறவாடுங்கள்.
.எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும்...ஒருவேளை அவள் முந்தி மரைணமடைந்தாள் அப்போது தெரியும் பிரிவு என்றால் என்னவென்று...
ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை விணாக்க வேண்டாம்.அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.
அடுத்து பிள்ளைகள்
பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள்.
அதன் பின் அவர்கள் உலகம் வேறு அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள்.அப்போது நீங்கள்
அவர்களோடு தொலைபேசி மூலமாக பேச கூடநேரம் பார்க்க வேண்டும்.
இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள்.
வெளி நாட்டில் தனது சின்ன குழந்தைகளை பிரிந்து பணி செய்யும் தகப்பன்மார்களுக்கு இந்த வேதனை புரியும்.
இப்படி இல்லாமல் உங்கள பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம்.ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம்.சும்மா அவகளை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.
அடுத்து உறவுகளும் ,உடண் பணி செய்யும் தோழர்களும்..
இதை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ நீங்கள் இருந்தால்
இது புரியும்..
வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும் ,தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள்.ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது.ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்....
எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே .....வாழ்கையை ருசியுங்கள்....அனுபவியுங்கள்.
காலமே ஒரு நாள் நம்மை தனிமை படுத்த போகிறது.
அன்று யாரும் நம்மை வந்து பார்க்க போவது இல்லை.
நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது..
தனிமையே நம்மை கொல்லப் போகிறது.
அதுவரை கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம் ,சண்டையிடுவோம்.கொஞசி குலாவுவோம் எதாவது செய்வோம்.. ஆனால் தனிமை வேண்டாம்..
அது மோசமானது.தற்கொலைக்கு சமமானது.
காலங்கள் திரும்ப கிடைக்காது ....

தர்ப்பை என்று பலர் அலட்சியமாக கூறும் நிலையில் தர்ப்பை பற்றி.

தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்.
இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.

No automatic alt text available.
தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது.
இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.
சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு "ஹிமகஷாயம்" என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.
சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.
தர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.
தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.
மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.
நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.
காஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்.

எளிதாக கிடைக்க கூடிய வெற்றிலையின் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!


வெற்றிலை, உமிழ்நீரை பெருக்கும், பசியை உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது, இயற்கை தந்த அற்புதம். ஆகவே அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும்.
வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.
வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றுப் போட்டுவந்தால் சளி குறையும்.
விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாத கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்து கட்டிவந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
இலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்து கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இதை இரவில் கட்டுவது நல்லது.
கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
மலச்சிக்கல் பிரச்னை தீர இதன் சாறு பலன் தரும். 30 மி.லி சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த் துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...