Saturday, December 22, 2018

இது போல கேள்வி வரும் போது பெப்பெப்பே என்று முழிக்கிறார்..!

ரிபப்ளிக் டிவி சேனலில், ஸ்மிரிதி இரானியோடு பேசப் போன கமலஹாசன், யானையின் காலில் மிதிபட்ட கோழிக்குஞ்சைப் போல ஆனது பார்த்து எனக்கு மிகுந்த பரிதாபமே தோன்றியது..!
இதற்கு காரணம் ஸ்மிரிதி இரானியின் ஆங்கில பேச்சுத் திறமை மட்டும்தானா..? ஸ்மிரிதி இரானி "ஹைதராபாத் யூனிவர்சிடி ' விவாதத்தின் போது பார்லிமெண்ட்டில் ஆற்றிய உரையை கமல் கேட்டிருந்தால், தான் யாருடன் மோதுகிறோம் என்று தெரிந்திருக்கும்..! போட்டிக்கு போகாமல் இருந்திருக்கலாம் அல்லது இன்னும் தயாராகப் போயிருக்கலாம்..!
கமலின் தவறு என்ன தெரியுமா..?
அவர் இங்கே தமிழகத்தில் கருணாநிதி போன்ற திராவிட அரசியல்வாதிகள், தாம் பேசும் விஷயத்தில் தமக்கே conviction இல்லை என்றாலும், வார்த்தைஜால வாய்ச்சவடாலாய்ப் பேச, அதை உலகமறியா அல்லக்கைககள் கைதட்டி வாய்பிளந்து ரசிப்பதைப் பார்த்து பார்த்து, தன்னாலும் அது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அரசியலுக்குள் வந்துவிட்டார்..! பிக்பாஸில் பேசி கைதட்டல் வாங்குவதைப் போல் நேஷனல் நியூஸ் சேனலிலும் வாங்கி விடலாம் என்று நினைத்தது பெரிய தவறு என்பதை இப்போது புரிந்திருப்பார்..!
ஸ்மிரிதி இரானி பேசும் போது அவரது 'வாக்கு சாதுர்யம்' மட்டும்தானா வெளிப்பட்டது..? தாம் பேசுவதில் அவருக்கு இருக்கும் conviction - 'வாய்மைத் தெளிவு'ம் வெளிப்பட்டது..! கமலோ, வார்த்தை ஜாலம் என்று நினைத்துக் கொண்டு, பேட்டிகளில் எதையாவது உளறி விட்டு, பிறகு இது போல கேள்வி வரும் போது பெப்பெப்பே என்று முழிக்கிறார்..!
அர்னாப் : "ஹிந்து பயங்கரவாதம் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறீர்களே..? அதை விளக்குங்கள்..!"
கமல் : "நான் சொன்னது ஹிந்து தீவிரவாதம்தான்... பயங்கரவாதம் அல்ல..' (வேறு ஒன்றுமே சொல்லவில்லை..!)
ஸ்மிரிதி : "முஸ்லீம்களின் தீவிரவாதம் பற்றி நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா..? உதாரணமாய் விஸ்வரூபம் ரிலீஸின் போது..?"
கமல் திருதிருவென முழித்து : "ஆமாம்... அப்... அவ்... யார் செஞ்சாலும் அது தீவிரவாதம் தான்.. அதாவது..... அப்...... அம்..... அவ்........"
இங்கே பேசும் போது , ஹிந்து தீவிரவாதம் என்று பேசி விட்டு, அங்கே போய் கேள்வி கேட்கப்படும் போது முழிக்கிறார், தடுமாறுகிறார்..! முதல் கேள்வியிலேயே தடுமாற்றம் ஆரம்பித்து, பின் மி்க மோசமாய் ஆடிப் போய், வாய் உலர்ந்து, அசடு வழிந்து, ஏதேதோ உளறி, ஸ்மிரித்தியிடம் மாட்டி சின்னாபின்னப்பட்டு, அயர்ந்து போய் மடமடவென தண்ணி குடிக்கிறார்..! பாவப்பட்டு, ஸ்மிரித்தியே பிறகு அவரை விட்டுவிட்டு அர்னாபையே புரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்..!
நேர்மைத் தெளிவு..! அது இருப்பவன் தடுமாற மாட்டான்..!
ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு அரசியல்வாதியை நாம் எங்கே பார்க்கிறோம்..? நாம் ஐம்பது வருடமாய் பார்த்த திராவிட அரசியல் என்பதே மக்களை ஏமாற்றுவதுதான்..! அடுக்குமொழி பேசுபவன் எல்லாம் அரசியல்வாதி இங்கே..! வெட்கமில்லா அல்லக்கைகளின் ஹீரோ வொர்ஷிப்தான் இங்கே..!
அந்த அளவு நேர்மைத் தெளிவு கொண்டு தமிழகத்தில் இருந்த ஒரே ஆள் : சோ..! ஸ்மிரித்தி இரானி போன்றோரிடம் பேசி வெல்லக் கடிய நேர்மைத் தெளிவு கொண்டவர் இப்போது தமிழகத்தில் யாரும் இல்லை..! ஸ்மிரித்தி இரானிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தால், இங்கே இருக்கும் ஒன்றரையணா திராவிட அரசியல்வாதிகள் எல்லாம் கதறி ஓடுவார்கள்..! அது நடக்காமல் பார்த்துக் கொள்ளத்தான், 'தமிழ் தேசியம்' இங்கே..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...