Wednesday, December 26, 2018

சட்டம்- தீர்ப்புரைகள்.

செத்து தொலை"* _என்று கணவன் கூறியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால், கணவன் மனைவியை தற்கொலை செய்ய தூண்டினார் என்று குறிப்பிட்டு கணவனுக்கு தண்டனை அளிக்க முடியுமா?_
முக்கிய தீர்ப்பு நகல் கீழே 👇👇👇சட்டரீதியான தேனவகளுக்கு மட்டும் படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே
🙏
கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு சண்டைகள் வருவது சாதாரண விஷயமாகும். ஒரு சாதாரண சண்டையில் "செத்து தொலை" என்கிற வார்த்தையை கோபத்தில் கணவன் கூறியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால் அந்த கணவருக்கு மனைவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள் நோக்கம் இருந்தது என்று கருத முடியாது.
உச்சநீதிமன்றம் "சுவாமி பிரகலதாஸ் Vs மத்திய பிரதேசம் (1995-SCC-CRL-943)" என்ற வழக்கில், கணவன் கோபத்தில் செத்து தொலை என்று கூறும் வார்த்தையை மனைவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கூறிய வார்த்தையாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " ருக்மணி Vs தமிழ்நாடு அரசு (2008-2-LW-CRL-1776)" என்ற வழக்கில், ஒரு சாதாரண சண்டையில் கூறிய "செத்து தொலை" என்கிற வார்த்தையைக் கொண்டு ஒருவர் தற்கொலைக்கு உடந்தையாக இருந்தார் என அனுமானிக்க முடியாது என தீர்ப்பு கூறியுள்ளது.
(🙏)
அதேபோல் உச்சநீதிமன்றம் "சந்துல் ராமகிருஷ்ணர் Vs சோந்தி சாந்தி மற்றும் பலர் (AIR-2009-SC-923)" என்ற வழக்கில், "செத்து தொலை" என்கிற வார்த்தையைக் ஒருவர் கூறியதால் மட்டுமே தற்கொலை செய்து கொள்ள உடந்தையாக இருந்தார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. எதிரிக்கு ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் உள்நோக்கம் இருந்தது என்பதை வழக்கின் சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே சாதாரணமாக ஒரு குடும்பச் சண்டையில் கோபத்தில் செத்து தொலை என்று கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால் அதற்கு கணவர் தான் காரணம் என்று கூறி, அவர் தற்கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்று கருதி தண்டனை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. A. NO - 1055/2004
சேகர் Vs மாநில அரசுக்காக, ஆய்வாளர், திருச்செங்கோடு காவல் நிலையம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...