ஆணும் பெண்ணும் சேர்ந்து செல்லக்கூடிய இன்ப சுற்றுலா தளம் அல்ல சபரிமலை ஐயப்பன் கோயில். உடல் தூய்மை மற்றும் மனத் தூய்மையோடு தரிசிக்க வேண்டிய தலம்.ஆனாலும் விரதமிருந்து பக்தி மார்க்கத்துடன் பத்து வயதுக்குக் கீழே உள்ள பெண் பிள்ளைகளும் 45 வயது மேல் உள்ள பெண்களும் செல்லலாம் என்ற விதிமுறையும் உண்டு. எனக்கு ஒரு சந்தேகம். விக்கிர ஆராதனை என்பது இஸ்லாம் மதத்தில் அல்லாஹ்விற்கு விரோத செயல் என்கிறார்கள்.கிறிஸ்தவர்கள் விக்கிரங்களை சாத்தான் என்கிறார்கள் அப்படி இருக்க சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல வேண்டும் என அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த கறுப்பு ஆடு யார்? அவர்களின் நோக்கம் என்ன? பெண்ணுரிமை என்பது சமூக பிரச்சினை இதை ஆன்மிகத்தோடு நினைக்கக் கூடாது. தீர்ப்பு என்பது சட்டத்துக்கு உட்பட்டும் மற்றும் ஐதீக முறையை இணைத்து தரப்பட வேண்டும். என்பது எனது தனிப்பட்ட கருத்து.


No comments:
Post a Comment