Thursday, December 20, 2018

ஜெ., மருத்துவ சிகிச்சை செலவு ரூ.6.85 கோடி.

மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை பெற்றதற்கு ரூ.6.85 கோடி செலவானதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 செப்.,22 ம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் டிச.,5ம் தேதி காலமானார்.
Image may contain: 1 person, smiling, text
அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணங்கள் குறித்த பட்டியலை அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்துள்ளது.
அதில், அவரது சிகிச்சைக்கு மொத்தம் ரூ.6.85 கோடி செலவாகியுள்ளது.
உணவுக்கு - ரூ.1.17 கோடி
ஜெ., அறை வாடகை - ரூ.24.19 லட்சம்
பொதுவான அறை வாடகை - ரூ.1.24 கோடி
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்பீலேவுக்கு - ரூ.92.07 லட்சம்
பிசியோதெரபி சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி செலவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 2016 அக்.,13ல் காசோலையாக ரூ.41.13 லட்சம், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், 2017 ஜூன் 15ல் ரூ.6 கோடி காசோலையாக அதிமுக கட்சி சார்பாக வழங்கப்பட்டது. மருத்துவமனைக்கு இன்னும் ரூ.44.56 லட்சம் பாக்கி உள்ளதாக அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் இன்று(டிச.,18) ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, ஆணையத்தில் பொன்னையன் நேரில் ஆஜாரானார். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், ஆஜராகவில்லை. சொந்த காரணங்களுக்காக இன்று ஆஜராக முடியாது என அவர் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து வேறொரு நாளில் சம்மன் அனுப்பி விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...