Saturday, December 22, 2018

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய............

முகப்பரு வந்தவுடன் அதை ஆரம்பத்திலே கிள்ளி எறியவேண்டும் என்ற எண்ணத்துடன் பருவை கிள்ளி விடுகின்றனர். பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றது. அவற்றை நீக்க சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றி நீக்கலாம்.
எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும்.
அரிசிமாவை தண்ணீர் விட்டு கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
சாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.
மஞ்சளுடன் கருவேப்பிலை சாறு சேர்த்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
பாதாம் பருப்பு பொடி 1/2 ஸ்பூன், கடலைமாவு 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மூன்றையும் கலந்து பசை போல் செய்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து கழுவி வர கரும்புள்ளி, வடுக்கள் மறையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...