Tuesday, July 31, 2018

சொந்த_வீடு_கனவை நிறைவேற்றும் #சிறுவாபுரி_முருகன்!

சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன்.
சொந்த வீடு அமைய சிறுவாபுரி
ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.
சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிறுவாபுரி உற்சவர்
பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.
அ முதல் அஃகு வரை.

பித்தவெடிப்பு.


*பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.
* தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
* கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.
* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.<br>
* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.<br>
* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.⁠⁠⁠⁠
Image may contain: one or more people

பதினெட்டாம் படி.

பதினெட்டாம் பெருக்கு - பதினெட்டாவது நிலையை அடைய வேண்டும் என்று தான் ஐயப்பன் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்...!
பதினெட்டாம் படிப் பெருக்கு என்று ஆறுகளில் பதினெட்டுப் படிகளை வைத்திருப்பார்கள்.
பதினெட்டுப் படிகளிலும் நீர் நிலைகள் பெருகி வரப்படும் போது அந்த வருடம் தாவர இனங்களின் சக்தி வெள்ளாமை பெருகி அதன் வளர்ச்சியின் தன்மைகள் முழுமை பெறும்.
நெல்லோ அது சம்பந்தப்பட்ட மற்ற தானிய வகைகளோ மற்ற பயிர்களோ அது பெருகும் என்று இப்படிப் பதினெட்டாம் படி பெருக்கு என்று வைப்பார்கள்.
இதை உணர்த்துவதற்காக நீர் நிலைகள் ஓடும் பக்கங்களில் இந்தப் பதினெட்டுப் படிகளை வைத்துக் காட்டியிருப்பார்கள்.
1.மழை நீர் பெய்து பதினெட்டுப் படிகளும் முழுமையாக அடைந்து செல்லும் போது
2.மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்குத் தேவையான உணவு கிடைக்கும் அந்தச் சக்தி பெற்ற நாள் என்று எண்ணச் செய்வதற்காகப்
3.பதினெட்டாம் பெருக்கு – ஆடிப் பெருக்கு என்று காட்டினார்கள் ஞானிகள்.
ஆனால் அதே சமயத்தில் மழை நீர் சரியாகப் பெய்யாதபடி பதினெட்டுப் படிகளுக்குக் கீழ் நீர் சென்றால் பயிரினங்களின் வளர்ச்சிகளும் அந்த வருடத்தில் குறைந்தே இருக்கும் என்ற உண்மையைக் காட்டினார்கள் அன்று ஞானிகள்.
இப்போது பல தரப்பட்ட தாவர இனங்களை வளர்க்கின்றோம். அது வளரவதற்குக் தேவையான சத்து சரியாகக் கிடைக்கவில்லை என்றால் தழைச் சத்து மணிச் சத்து என்று பல உணவுகளைச் சத்தாக அதற்குக் கொடுக்கின்றோம்.
அப்பொழுது அந்தத் தாவர இனங்கள் செழித்து வளர்ந்து அது தன் உணர்வின் சத்துகளைப் பெருக்கி முழுமையான மகசூலைக் கொடுக்கின்றது. அதற்கு வேண்டிய சத்தைப் பெருக்கி முழுமை அடையச் செய்கின்றோம்.
அதைப் போன்று தான் தனது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எந்த எண்ணங்களைப் பெருக்க வேண்டும்…? பத்தாவது நிலையான கல்கியை எப்படி ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
ஏனென்றால் உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிப் பத்தாவது நிலையை அடைந்தவர்கள் தான் மகரிஷிகள்.
எட்டுத் திக்கிலும் எது வந்தாலும் அந்த உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகப் பெருக்கிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருப்பவர் துருவ மகரிஷி.
1.அஷ்ட திக்கிலிருந்து (எட்டு) வரும் தீமைகளை அகற்றித்
2.தீமையற்ற உணர்வைத் தன் உடலுக்குள் அணுக்களாகப் பெருக்கி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற வேண்டும் (பத்து) என்று அன்று பல நிலைகளில் எடுத்துக் கொண்டவர் தான் ஐயப்பன்.
இளமையிலேயே கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல சரீரங்களை அவர் எடுத்தாலும் கடைசியில் அஷ்ட திக்கிலிருந்தும் மதங்களாலோ மற்ற இனங்களாலோ வரும்
1.பலருடைய எண்ணங்களிலிருந்து எந்த ருபத்தில் எது வந்தாலும்
2.அதைத் தனக்குள் வராதபடி அடக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகப் பெற்றார்.
3.சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்.
4.இந்த உண்மையினைத் தான் அங்கே பதினெட்டுப் படிகளை வைத்துக் காட்டி உணர்த்தப்படுகின்றது.
அதன் வழியில் யார் யார் செல்கின்றாரோ அந்தப் பதினெட்டாவது நிலை அடைந்தால் அங்கே சப்தரிஷி மண்டலத்தை அடைய முடியும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள்.

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்....
"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம் னு சொல்லுவாங்க ....
உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது
முதலாவது பலன்
-------------------------------------
அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும்
இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.
கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.
No automatic alt text available.
மருத்துவ பலன்
-----------------------------------
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாகமாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.
இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....
நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல்சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பாரம்பரியம்!

*துரியோதனனும் ஸ்டாலினும்*

ரெண்டு பேரும், சொந்த திறமையினால் விட, பிறப்புரிமையை முன்னிறுத்தி, அரசாள நினைத்தவர்கள்,..!
-------------------
*பீஷ்மரும் அத்வானியும்*
இருவரும் மகுடம் தரிக்கவில்லை! மரியாதை கிடைத்தது! ஆனாலும், இறுதிக்காலத்தில் கையறு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்!
-------------------
*அர்ஜுணனும் கெஜ்ரிவாலும்*
அதீத திறமையுடையவர்கள்! தர்மத்தின் பக்கம் நின்றதால், மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்தவர்கள்!.. ஆனால், தர்மத்தின்படி வாழ்வதின் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்!!!
-------------------
*கர்ணனும் மன்மோஹன் சிங்கும்..!*
அதிபுத்திசாலிகள்! ஆனால், அதர்மத்தின் பக்கம் நின்றதால்,.. வாழ்வில் எந்தவித உயர்வும் காணாதவர்கள்!
-------------------
*சகுனியும் மோடியும்*
இருவரும் நிஜமான போர்/சண்டை செய்ததில்லை.!.. வெறும் தந்திரங்கள் மட்டுமே செய்தனர்!
-------------------
*திருதராஷ்டிரனும் சோனியா வும்!*
மகன்(கள்) மேல் வைத்த கண்மூடித்தனமான பாசத்தால், நிதரிசனத்தை காணமுடியாத குருடர்களானவர்கள்..!
-------------------
*பகவான் கிருஷ்ணரும் அப்துல் கலாமும்..!*
இருவரையும் கொண்டாடுவோம்,.. ஆனால் அவர்கள் உபதேசித்தவற்றை எதையும் பின்பற்ற மாட்டோம்,..!
-------------------
இவ்வளவுதான்,...
மஹாபாரதமும் - பாரதமும்!🤗🤗🤗

Monday, July 30, 2018

THE HEALTH POINT.

1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
🌷3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
🌷4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
🌷நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
🌷விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
🌷இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
🌷லட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் !!!
🌷இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???
🌷அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!
🌷அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!
நாம் இனியும் வாழ்வோம்...

ப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா? -சாப்பிடாதீங்க!

உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.
நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
விஷமாகும் உணவு
இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்
உணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!
எளிதில் நோய் தாக்கும்
அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.
அதேபோல் நாட்கணக்கில் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

இரெண்டு மிக பெரிய சைன்டிஸ்ட் மின்தானாலும், நேற்றும் இறைவனடி சேர்ந்துள்ளனர்.

1. ISRO சைன்டிஸ்ட் UR ராவ் (வயது 85 ) முதல் சாட்டலைட் ஆரியப்பட்டவை, விண்ணில் ஏவியவர்.\
2. ப்ரோபஸ்ஸோர் யஷ்பால் (வயது 90 ) இவர் தான் நம் வாழ்வில், நமது வீடுகளில் பாப்புலர் சைன்ஸை நமது லிவிங் ரூம்களில் கொண்டுவந்தவர்.
ஒரு அரசியல்தலைவர் இறந்தால், கண்ணீர் விடுவதும்,கோஷங்கள் போட்டு அவரை சாகாமல் கடவுளை பிரார்த்திப்பதும், நிறைய அமர்க்களம் பண்ணுவதும் நம்மில் அதிகமாகிவிட்டது.
உயிர் நீத்த அந்த இரெண்டு சைட்டிஸ்ட்டுகளின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அவர் போன்ற மா மனிதர்கள், இந்திய மண்ணில் பிறக்க பிரார்த்திப்போம். வாழ்க பாரதம். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.
அனைவருக்கும் பகிரவும். ஜெய் ஹிந்த்.

முரசொலி மாறன் சகோ திமுக என்னவாயிற்று?

திமுக இரண்டாக உடையும் என்பது உண்மை..
அல்லது மூன்றாக உடையவும் வாய்ப்புகள் அதிகம்..
1. DMK(A)
2. DMK(S)
3. DMK(Kani).
Sun TV யார் பக்கம்? Likely Stalin camp..
கலைஞர் TV யாருக்கு?
மற்ற TV சேனல்களுக்கு நல்ல தீனி...
Image may contain: 3 people, people smiling, people standing

உமக்குப் பைத்தியமா?"

என் அடிமைகளுக்கு நீ அடிமை:
மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள்.
அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.
அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.
முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.
முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து "கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா?" என்று கேட்டான்.
அதற்கு முனிவர் "மன்னா.. நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது.
இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!" என்றார்.
அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. "நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக் முடியும்?" என்று முனிவரிடம் கேட்டான்.
அவர் "அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன்" என்றார்.
மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.

உள்ளே இருப்பவர் யார் விஞ்ஞான திருடர் அப்பறம் தருடாமல்என்ன செய்வார்கள்.

காவேரி ஆஸ்பத்திரியில் டூட்டி டாக்டரின் ஐ-போன் திருட்டு-செய்தி.
காலா காலத்துலே
எடத்த காலி பன்னுங்கப்பா,
அடுத்து,
நர்ஸ் ஸ காணோம்,
அப்புறம்
டாக்டரக் காணோம்,
அப்புறம் என்ன
ஆஸ்பத்திரியவே காணோம் தான்?
ஏழெட்டு வருஷமா ஆட்சியிலயும்
இல்லே?
தொழில மறந்துடக் கூடாதே?
Image may contain: 1 person, smiling, sunglasses and closeup

‘மயிலையே கயிலை’ என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?

‘சென்னை நகரின் இதயம்' என்று சொன்னால், மயிலாப்பூரைத்தான் சொல்லவேண்டும்.
மயிலாப்பூருக்குத்தான் எத்தனை பெருமை?! 'மயிலையே கயிலை' என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?
வரலாற்று ரீதியாக மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்று சொல்லும்படி மயிலாப்பூரைச் சுற்றிலும் ஏழு சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.
மேலும் மயிலையின் காவல் தெய்வமாக கோலவிழி அம்மனும், முண்டகக்கண்ணி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.
திருவள்ளுவர் பிறந்ததும்கூட மயிலாப்பூரில்தான் என்று சொல்லப்படுகிறது. இப்படி பல மகத்துவங்கள் நிறைந்த மயிலாப்பூருக்கு அந்தப் பெயர் வந்த கதையும், அதன் பின்னணியில் இருக்கும், தொண்டர்களின் பெருமையை உணர்த்துவதான சம்பவமும் பற்றி தெரிந்துகொள்ளலாமே.
'திருத்தொண்டர்களின் பெருமை, இறைவனை விடவும் பெரிது' என்று அந்தச் சிவப் பரம்பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.
கயிலையில் ஒருநாள் சிவபெருமான், அன்னை உமையவளுக்கு வேதப் பொருளை விளக்கிக்கொண்டிருந்தார்.
அந்தவேளையில் அழகான மயில் ஒன்று, அன்னையின் எதிரில் வந்து தோகை விரித்து ஆடியது. அதன் ஆட்டம், ஜகன்மாதாவின் சிந்தையைச் சிதறச் செய்தது. மயூரத்தின் ஆட்டத்தில் லயித்துப்போனாள்.
சிவபிரான் சினம் கொண்டார். ‘‘தேவி, நான் வேதப்பொருள் பற்றி கூறுகையில் நீ மயிலின் ஆட்டத்தை ரசிக்கிறாயே’’ என்று கேட்கிறார். அதற்கு இறைவி, ‘‘மயில், நம் குழந்தை முருகனின் வாகனம் அல்லவா? முருகனுக்குத் தொண்டு செய்கிறது அல்லவா? அதைப் பார்த்ததுமே எனக்கு முருகனின் நினைவு வந்துவிட்டது.
அதனால்தான் நான் மயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று கூறினாள்.
‘அப்படியானால் என்னை விடவும் அந்த மயில் உனக்கு உயர்வாகத் தெரிகிறதா?’ என்று ஈசன் கேட்டார்.
‘சுவாமி! தொண்டர்கள்தான் பெரியவர்கள் என்பது சத்தியம் அல்லவா? அப்படி முருகனுக்கு தொண்டு செய்யும் மயிலும் பெரிதுதானே’ இது இறைவியின் கேள்வி.
‘அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’
‘முடியும்!’
‘எப்போது?’
‘இதோ, இப்போதே’
உடனே அன்னை உமையவள், எந்த மயிலின் காரணமாக இந்த விவாதம் தொடங்கியதோ அந்த மயிலின் வடிவம் கொண்டு, நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் மயிலாப்பூர் தலத்தை அடைகிறாள்.
தேவி மயிலாக உலவிக் கொண்டிருக்கும் அந்த மயிலாப்பூரிலேயே இறைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல், ஈசனும் அங்கிருந்த புன்னைமரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளுகிறார்.
அவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்ய அங்கு யாரும் இல்லையே! தொண்டர்கள் இல்லாமல் ஈசன் தவித்திருப்பது கண்டு மயில் உருவம் கொண்டிருந்த அன்னை, அருகில் இருந்த பொய்கையில் நீராடி, தன் அலகினால் மலர்களையும் கனிகளையும் எடுத்து வந்து சிவலிங்கதுக்கு அர்ப்பணிக்கிறாள்.
அன்னையின் தொண்டில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்குத் தரிசனம் தந்தார். அன்னை சுய உருவம் ஏற்றாள்.
‘தேவி! தொண்டர்களின் பெருமையை உலகத்தவர் உணர்ந்திடவே நாம் இந்த நாடகத்தை நடத்தினோம். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். கருணையே வடிவானவள் அல்லவா இறைவி!
‘ஐயனே! தொண்டர்தம் பெருமையை உலகறியச் செய்ய தாங்கள் எழுந்தருளிய இத்தலத்திலேயே தங்கள் சாந்நித்யம் நிலைத்திருக்க வேண்டும்.’ என வேண்டினாள்.
அப்படியே வரம் தந்த சிவபெருமான், ‘தேவி! நீயும் இங்கே வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தரும் கற்பகமாக நிலைத்திருப்பாயாக’’ என அருளினார். இப்படி அம்மையும் அப்பனுமாய் இன்றைக்கும் மயிலையில் எழுந்தருளி, மனமுருக வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் அருள்புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
மயிலையின் தல வரலாறே தொண்டர்தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்தியதன் காரணமாகத்தான், மயிலையில் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு பெறுகிறது. மயிலாக அன்னை இறைவனை வணங்கி அருள் பெற்றதால்தான் மயிலாப்பூர் என பெயர் பெற்றது.

எங்கோ_போய்க் #கொண்டிருக்கிறது #நம்_சமூகம்??

#Karunanidhi
ஒருவர் உயிருடன் இருக்கும் போதே, அவரை புதைப்பதா எரிப்பதா; எங்கு புதைப்பது எங்கு எரிப்பது; இது போன்ற விவாதங்களும் கலந்துரையாடல்களும் என்னைப் பொறுத்தவரை நாகரீகமற்ற செயல். மனித போர்வைக்கு அடியிலிருக்கும் ( அல்லது புதைக்கப்பட்டிருக்கும்) ஆன்மாவுக்கு நாம் செய்யும் அவமரியாதை.
இது ஒருபுறமிருக்க... கருணாநிதியை அண்ணாவுக்கு நிகரான இடததில் மரீனா கடற்கரையில் புதைக்கப்படுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வந்து கொண்டிருக்கும் சில ஹேஷ்யங்கள் கோபத்தை வரவழைப்பதோடு இல்லாமல் கவலையையும் தருகிறது.
மெரீனா என்ன இடுகாடா. ஒரு தனி மனிதனுக்கு இது மாதிரியான சலுகை கிடைக்குமா இது வரை அங்கு இடப்பட்ட மூவரும் முதலமைச்சராக இருந்த போது அவர்களின் மரணம் நிகழ்ந்ததால் அவர்களகன் பூத உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது என்ற காரணம் கூட என்னைப் பொறுத்தவரை agreeable இல்லை என்றாலும் அரசு protocol படி செய்திருக்கிறது என்றாவது பேசாதிரீக்கலாம். ஆனால் இன்று கருணாநிதிக்காக கேட்கப்படுவது.. அநாகரீகத்தின் மற்றும் அகங்காரத்தின் உச்சகட்டம்....
ஏனோ காமராஜருக்கு அந்த இடம் மறுக்கப்பட்டதாக படித்த சம்பவம் வேறு நினைவுக்கு வருகிறது.
வாழும் போது நினைத்தையெல்லாம் எந்த விதமான தவறான வழியிலும், அதிகார மற்றும் பண துஷ்பிரயோகம் கூட நடத்திக் கொண்ட ஒரு அரசியல்வாதி, தன் வாழ் நாள் முடியும் தறுவாயிலாவது, கடைசியாக, அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும் ... பார்ப்போம்!

ஆதா...ர்...(AADHAR)ஆம் ஆத்மி அதிகார்-(சாதாரண மனிதனின் அதிகாரம்..)

ஆதார்--The Unique Identification Authority of India (UDAI), தற்போது அரசுதொடர்பான பொதுமக்கள் சேவை மற்றும் குடியுரிமை அடையாளம் என்றவகையில் பயன்படுத்தப்பட்டு சமையல் வாயு இணைப்பிலிருந்து குடும்ப அட்டைவரை போலிகளை ஒழித்திருக்கிறது.முறைகேடான
வங்கிப்பணப் பரிவர்த்தனை மற்றும் சேமிப்பில் தில்லுமுல்லுகளை ஒழிக்க பெரும்பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிராய் சேர்மன் R.S.ஷர்மா ஆதார் டேட்டாவை ஒருகாலும் ஹேக் செய்யமுடியாதென சவால்விட்டு தனது ஆதார்நம்பரை டுவிட்டரில் வெளியிட்டு சவால்விட்டார்.
சவால்விட்டதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து அவரது தனிநபர் தகவல்கள் அனைத்தும் ethic hacker என்னும் குற்ற எண்ணமில்லாத IT ஜாம்பவான்களால் வெளியிடப்பட்டது.அத்துடன் அவரது வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் பணமும் டெப்பாஸிட் செய்யப்பட்டது .
இப்போது அவையாவும் ஆதார் டேட்டா பேசிலிருந்து திருடப்பட்டதல்ல ..பல்வேறு இணைய தளம் மூலம் திருடப்பட்டவை என்கின்றனர் டிராய் சேர்மனும் ஆதார் சம்மந்தப்பட்டவர்களும்..
இதன் அர்த்தம்புரியவில்லை. அனைத்து ஆதார் விவரங்களும் வெளிச்சந்தையில் பெற்றுக்கொள்ள இயலும் என்னும்போது சேமிக்கப்பட்ட உங்கள் விவரங்கள் அனைத்தும் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளதெனும் வெற்று விளம்பரம் எதற்கு ?
அவள் ஊரறிந்த விபச்சாரியாயினும் எங்களிடம் கற்புடன் இருக்கிறாள் என்னும் UDAI வாதம் பிடிபடவில்லை..

அதனாலதான் அம்மா கட்சியே களைகட்டியது.

திரு. கருணாநிதியை முதல்வர் ஈபிஎஸ்
நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..
××××××
அப்போது சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது . 2012 என நினைவு.
அப்போது ஒரு விவாதத்தில் துரை முருகன் ஏதோ சொல்ல.. முதல்வராக இருந்த அம்மா எழுந்து ,
உங்கள் திமுக ஆட்சி அமைத்தால் இவர்இவர்தான் அமைச்சர்கள் என முன்கூட்டியே கூறிவிடலாம். அந்தளவு பட்டா போட்டு வைத்துள்ளீர்கள்.
ஆனால் அதிமுக ஆட்சி அமைத்தால் இவர்தான் அமைச்சர் ஆவார் என ஒருவரையாவது உங்களால் கணிக்க முடியுமா எனக் கேட்டார்..
துரைமுருகனும் பதில் சொல்ல இயலாமல் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டார்..
இது எதற்கு என்றால்
இப்படி கருணாநிதி படுத்திருக்க ஈபிஎஸ் முதல்வராக நலம் விசாரிப்பார் என யாராவது யூகித்து இருக்க முடியுமா...?
கற்பனையில் கூட இயலாது.
......
இதுதான் வாரிசு அரசியலுக்கும்
தொண்டர்கள் அரசியலுக்கும் உள்ள வேறுபாடு...
#அதிமுக

Image may contain: 1 person, smiling, closeup

Sunday, July 29, 2018

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள்.

1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.
4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.
6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.
12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.
13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத் தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.
15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பாகைம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
17. ``எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறி உள்ளார்.
23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் இம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.
28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.
33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
34. நரசிம்மரை வழிபடும் போது ``ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.
35. ``அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.
36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.
37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.
39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.
40. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோவில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோவில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்.
"ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் "

பேரெல்லாம் சம்ஸ்கிருதம்.பேச்செல்லாம் விதண்டாவாதம்.

2010 என நினைக்கிறேன்
2 G விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நேரம்
நாடே அலறியது
மத்திய அமைச்சர் ராசாவை ராஜினாமா செய்ய சொல்லி கருணாநிதியும் சொல்லிவிட்டார்
இங்கே தலையாட்டி விட்டு அங்கே போய் மறுத்தால் என்ன செய்வது
கூடவே மத்திய அமைச்சராக இருந்த தன் மகன் அழகிரியை அனுப்பி வைத்தார்
எங்கும் தப்பிவிடாமல் பார்த்து கொள்ள டி ஆர் பாலு
டெல்லியில் விமானம் இறங்கியது
கட்சிக்கும் குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தை அழகிரியால் தாங்க முடியவில்லை
விமானத்தில் இருந்து இறங்கி போகும் போது அழகிரிக்கும் ராசாவுக்கும் வாக்குவாதம்
"உன்னால் தானடா இந்த அவமானம் கட்சிக்கும் குடும்பத்திற்கும் "
என அழகிரி ராசாவை தாக்க
இரு மத்திய அமைச்சர்களின் மோதலை டெல்லியே பார்த்தது
அழகிரியின் அடி தாங்காமல் நேரடியாக பிரதமரிடம் ஒடி தனது ராஜினாமா கடிதத்தை ராசா கொடுத்தார் பிறகு சிறையிலடைக்கப்பட்டார்
இந்த நிகழ்வை ஜெ வும் மறைமுகமாக சொல்லி பட்டையை கிளப்பினார்
இரண்டு நாட்களுக்கு முன் பிரசன்னா கோபலபுரத்தில் செய்த கூத்தை நாடே பார்த்தது
அழகிரி பார்த்தார்
"நமது குடும்பத்தில் மீண்டும் ஒரு ராசாவா "என கொந்தளிக்க பிரசன்னா தகுந்த மரியாதையுடன்
கவனிக்கப்பட்டு வெளியில் துரத்தப்பட்டது இப்போது வெளி வர ஆரம்பித்துள்ளது
அழகிரி தான் சரியான ஆள் கழகத்தை சரிப்படுத்த என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்
தனி ஒரு மனிதராய் குடும்பத்தையும் கழகத்த்தைய்ம் அலற வைத்து கொண்டு இருக்கிறார்

பித்தப்பை கற்கள் பிரச்சனையா? இதோ தீர்வு!

நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை.
ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.
நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.
ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும்.
பொதுவாக நம்தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும். மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.
பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்...!!
பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.
ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக நம்தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
பித்தப்பையில் கற்கள் (Gallstones)
அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள்,கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் .
மேலும், இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.
தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.
அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.
பித்தப்பை கல் இருப்பது உறுதியானால்..
1. அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும்.
2. வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.
3. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
4. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
5. ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் ,
6. பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும்.
7. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.
பித்தப்பை கல் நீங்க...
1. இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
2. எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.
3. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.
4. பத்து பங்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாகக் குறுக்கி வடிகட்டி அந்த நீரை ஒரு நாளில் பல தடவை சிறுகச் சிறுக பருகுவதின் வாயிலாக பித்தப்பை கற்கள் கரைவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.
5.நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது
1. வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம்,
2. கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.
வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.
3. உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.
4. வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.
5. பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில அருகில் உள்ள (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ, அக்குபன்ச்சர்) மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துக் கொள்வது நல்லது.

"எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது"......!!

ஒரு விமானத்தில்,,,
தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,
" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,
அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!
"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....? என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,
"என்ன மாதிரி கேள்விகள்".....?
என்று சிறுமி கேட்டாள்.....!!
"கடவுள் பற்றியது".....!!
ஆனால்...,
கடவுள்,
நரகம்,
சொர்க்கம்,
புண்ணியம்,
பாவம் என
எதுவும் கிடையாது....!!
"உடலோடு இருக்கும் வரை உயிர் "......!!
"இறந்த பிறகு என்ன"......?
தெரியுமா என்றார்....!!
அந்த சிறுமி யோசித்து விட்டு........ ,
"நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"......? என்றாள்.
ஓ எஸ்..!
"தாராளமாக கேட்கலாம்".. என்றார்....!!
ஒரே மாதிரி புல்லை தான்.....,
பசு,
மான்,
குதிரை
உணவாக
எடுத்துக்
கொள்கிறது.....!!
ஆனால்,
வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது......!!!
"பசுவிற்கு சாணியாகவும்",,,,,
"மானுக்கு சிறு உருண்டையாகவும்"......,
"குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!
'ஏன் அப்படி'....?
என்று கேட்டாள்.
'தத்துவவாதி'.
" இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".......!!
'திகைத்துவிட்டார்'......!!!
"தெரியவில்லையே".....,
என்று கூறினார்....!!
கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான....,
"உணவு கழிவு பற்றிய ஞானமே".....
நம்மிடம் இல்லாத போது
பின் ஏன் நீங்கள்
கடவுள்,
சொர்க்கம்,
நரகம் பற்றியும்,
"இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".......?
"சிறுமியின் புத்திசாலித்தனத்தால்"......,
"தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்"......!!
"எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது"......!!
"தலைக்கனமும் கூடாது"......!!
"கற்றது கைமண் அளவு",.....!!
"கல்லாதது உலகளவு".....!!!

உண்மை பாதி பொய்மை பாதி சேர்த்து செய்த கலவை.

Image may contain: text

இனிமேலாவது திருந்துவார்களா இது போன்று படம் எடுக்கும் மூடர்கள்.

Image may contain: plant and text

பொண்ணுகளுக்கு_மட்டும்....


#அப்பா_அம்மாவை நம்பு மற்ற எவனையும் நம்பாதே.!
கஷ்டமா இருந்தா உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக்கோ.. 
எவன்கிட்டையும் ஆறுதல் கொட்டாதே...
ஆறுதல் எற்ற பெரில் அவன் உன்கிட்ட வேற எதிர்பார்ப்பான்.‌..
புண்ணியம் தேடாத, எவனுக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தாலே போதும்..
திமிரா இரு தப்பில்ல..
அந்த திமிரு உன்னை நல்ல நிலைமைக்கு எடுத்து செல்லும்..‌
உன்ன நம்பு,
உன்னை தவிர உண்மையான உன்னதமான ஜீவன் யாருமில்லை.‌
செய்யுற தொழில நம்பு..
கணவனே கைவிட்டாலும் தெய்வம் மாதிரி உன்னை
காப்பாற்றும்..
கஷ்டமா இருந்தா தனிமையை தேர்ந்தெடு
வேற யாரையும் நம்பி தேர்ந்தெடுக்காதே...
சந்தோசமா இருந்தா நட்புக்கிட்ட மட்டும் ஷேர் பண்ணு
அவன் தான் தாங்குவான் கொண்டாடுவான்...
தன்மான திமிரும்
தன்னம்பிக்கையும் தன்னால பெற்று இருக்கும்
பொண்ணுகளுக்கு எந்த சூழ்நிலையிலும்
ஜெயிக்கிற சக்தி உனக்குள்ளே இருக்கு
வெளியே தேடாதே
முக்கியமா சில ஆண்கள் கிட்ட தேடாதே
தடை கற்களே அவங்க தான்...
என்ன ஆனாலும் எது போனாலும்
எவன் ஆண்டாலும் தைரிமாயிரு
அந்த பயத்துக்கே பயம்
காட்டுனவ நம்ம பொண்ணுங்க..
முன்னேறு முன்னேறு..
யார் குறுக்கு வந்தாலும் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இரு...
இது வேஷம் போடும் உலகம் இது உன் குடும்பத்தினரை தவிற வேற யாரயும் நம்பாதே.!
இதில் எல்லா ஆண்களும் தவறு என்று நான் சொல்லல....
#தவரான_ஆண்களுக்கு_இது_தவறாகவே #தெரியும்..

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...