Saturday, July 28, 2018

வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்.

திருச்சி முக்கொம்பிலிருந்தும், ,காவிரி கல்லணையிலிருந்தும் திறக்கப்பட்ட நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக அணைக்கரையை வந்தடைந்தது. அணைக்கரையிலிருந்து வடவாற்றின் வழியே 2000 கனஅடி திறக்கப்பட்ட காவிரி நீர் 22 கி.மீ தூரம் பயணித்து இன்று காலை வீராணம் ஏரியை அடைந்தது.
கடந்த 5 மாதமாக வீராணம் ஏரி வறண்டு கிடந்தது. விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். சென்னைக்கான குடிநீரும் 5 மாதங்களாக இங்கிருந்து அனுப்பப்படவில்லை.
இன்று காலைதான் காவிரி நீர் வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஏரிக்கு காவிரி தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
Image may contain: outdoor, water and nature
நீர்வரத்து அதிகரித்தால் இன்னும் 2 நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை முதல் வீராணத்திலிருந்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பப்படும்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாதத்தில் தற்போதுதான் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.
ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. ஏரியின் நீர்மட்டம் 27 அடிக்கு வந்தால்தான் சென்னைக்கு இங்கிருந்து குடிநீர் அனுப்புவார்கள்.
இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...