Thursday, July 26, 2018

வானில்_நிகழும் #வண்ணக்_கோலங்கள்...!!!

***************************************
2018-ம் ஆண்டுக்கான முழு சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமையான (நாளை) நிகழ உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம் இது.
நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இதுவே ஆகும்.
நிகழும் இந்த அரிய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு விளையாது.
பொதுமக்களும், மாணவர்களும் சந்திர கிரகணத்தை நேரடியாகவும், தொலைநோக்கிகள் மூலமும் பார்த்துப் பயன்பெற பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 5 தொலைநோக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நீண்ட முழு சந்திர கிரகணம் அடுத்ததாக 2029 ஜூலை 25-ம் தேதி நிகழும். அப்போதும் 102 நிமிஷங்கள் நீடித்திருக்கும்.
பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்
அதுபோல, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இதன் காரணமாக ஜூலை 25 முதல் ஜூலை 31-ம் தேதி வரை பூமியின் அருகே செவ்வாய் நெருங்கி வருகிறது. அப்போது, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தொலைவு 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும். நீள்வட்டப் பாதையில் சுற்றும் செவ்வாய் கோள் மிகுந்த தொலைவுக்குச் செல்லும்போது 38 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.
இந்த எதிரமைவு நிகழ்ச்சியை பொதுமக்கள் காணவும் பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சூரியனுக்கு நேர் எதிரே 180 டிகிரி கோணத்தில் ஒரு கோள் வரும்போது, அந்தக் கோள் எதிரமைவு கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த எதிரமைவின்போது, அந்தக் கோளானது பூமிக்கு மிக அருகில் வருவதோடு, பெரிதாகவும், ஒளியுடனும் காணப்படும். மேலும், சூரியன் மறையும்போது உதயமாகி, இரவு முழுவதும் வானில் காணப்படும்.
இந்த நேரத்தில் அந்தக் கோள் குறித்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...................................................................
❀❀❀••••🌿🍁🍁🌺🍁🍁🌿••••❀❀❀

❀❀❀••••🌿🍁🍁🌺🍁🍁🌿••••❀❀❀
...................................................................

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...