Saturday, July 21, 2018

420_தினகரனின்_மங்கம்மா_சபதம்."???

“எங்களுக்கு துரோகம் செய்தவர்கள் பட்டியலில் 10 முக்கிய நபர்கள் இருக்கிறார்கள்; அவர்களை படுதோல்விய அடையச் செய்ய கடுமையாக உழைப்போம்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய தினகரன், ‘நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்பார்க்கிறோம். பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்துள்ளோம். எடப்பாடி தொகுதி மட்டுமின்றி, 234 தொகுதியிலும் முழு கவனம் செலுத்துவோம்’ , “எங்களுக்கு துரோகம் செய்தவர்கள் பட்டியலில் 10 முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை படுதோல்விய அடையச் செய்ய கடுமையாக உழைப்போம். துரோகம் இழைத்தவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம்.”
என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆக...
தினகரன் தனிக்கடை திறந்து... தனிக்கச்சேரி நடத்திவருகிறார்.
தன்னை நம்பி... தனது பணத்தை நம்பி வந்த 18 MLAக்களை நட்டாற்றில் விட்டு நாடகமாடுவதைப்போலவே....
நடக்கப்போகும் தேர்தலில் இவர் கட்சி வேட்பாளர் கள் வெற்றி பெற பாடுபடுவேன் எனக் கூறவில்லை...
தனக்கு நல்ல அடிமையாக இருப்பார்... தனக்கு நல்ல பினாமி யாக இருப்பார்...
கொள்ளையடித்து கொண்டு வரும் பணத்தை எல்லாம் தன்னிடம் கொட்டிவிட்டு தான் போடும் பிச்சையை மட்டும் எடுத்துசெல்வார் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை யில் முதல்வராக்கியவரே நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டாரே.. எனும் ஆதங்கத்தில் நாள்தோறும் புலம்பித் திரிகிறார் தினகரன்.
அதனால் தான் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூற முடியவில்லை..
தோற்கடிக்க கடுமையாக உழைப்போம் என புலம்புகிறார்.
ஆர்கேநகர். தொகுதி நாடகம் ஒரு ஒருமுறைதான் வெற்றி பெறும்...
மக்கள் எப்போதும் ஏமாற மாட்டார்கள்...
மக்கள் எப்போதும் புத்திசாலி கள்தான்...
யாரை எப்போது எப்படி வெற்றி பெற செய்யவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள்...!!!
நம்பிக்கை துரோகிகள்...
ஏமாற்றுக்காரர்கள்... கொள்கைக் காரர்கள்...
கொலைகாரர்களைகளை நன்கு அறிவார்கள்...
பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...