Sunday, July 22, 2018

உளுந்து நல்ல ஒரு உணவு...


நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும் உடல் குளிச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உளுந்து நல்ல ஒரு உணவு... அதுமட்டுமில்லாமல், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமா இருக்கு இந்த உளுந்து... அதோட, குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குது. தினமும் நாம உளுந்தை உணவுல சேர்த்தால் மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனையெல்லாம் தீரும். அப்புறம்... இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவை குறைச்சு இதயத்தை பலப்படுத்துது இந்த உளுந்து. பெண்களுக்கு இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்து மிகவும் நல்லது.. அதுலயும் கருப்பு உளுந்து (தோல் நீக்கப்படாதது) ரொம்பவே நல்லது..
இந்த கருப்பு உளுந்து லட்டு செய்முறை ரொம்ப சிம்பிள்தான் செஞ்சு பாருங்க....
1 டம்ளர் உளுந்து
4 ஸ்பூன் அரிசி
வெல்லம்
ஏலக்காய்
நெய்
உளுந்தையும் அரிசியையும் வெறும் கடாயில் போட்டு நல்லா வறுத்துக்கனும்.. ஆறவைச்சு மிக்ஸியில ஏலக்காய் , தேவையான பொடித்த வெல்லம் சேர்த்து நைசா அரைக்கனும்.. அந்த மாவைத் தட்டில் கொட்டி , நெய்யை சிறிது சூடு பண்ணி அந்த மாவுல ஊத்தி இதுமாதிரி சின்ன சின்ன உருண்டையா பிடிக்கனும்.. கருப்பு உளுந்து லட்டு ரெடி.. நேற்று தோழி கொடுத்த உளுந்துல நான் செஞ்சிட்டேன்.. எதையுமே விரும்பி சாப்பிடாத என் பொண்ணு மைசூர் பாக் மாதிரி இருக்குன்னு சாப்பிட்டாள்.. ஆரோக்கியமான ஒரு உணவு.. நீங்களும் செஞ்சு பாருங்க.. 😊

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...