Wednesday, July 25, 2018

செய்யக்கூடாதவை (நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் கடைப்பிடித்தால் போதும்)

தலைக்கு எண்ணெய் தடவும் போது கண்ணாடி பார்த்துக்கொண்டு தடவக்கூடாது.
வீட்டிலிருந்து யாரேனும் வெளியில் சென்றதும் உடனே தலை முழுகக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நான் போறேன் என்று சொல்லக்கூடாது. போய் வருகிறேன் என்றுதான் சொல்லவேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்க தலையில் எண்ணெய் வைத்ததும் அப்படியே ஏதும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் உட்பட.
தெற்குப் பக்கமாகப் பார்த்து ‘ஷேவ்’ (முகச்சவரம்) செய்துகொள்ளக்கூடாது.
வீட்டில் யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது. கொஞ்சம் பொறுத்திருந்து செல்லலாம்.
வீட்டிலிருந்து யாரேனும் புறப்பட்டுச் சென்றதும் வீட்டைப் பெருக்கக்கூடாது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டுதல், முகச்சவரம் செய்தல், பேன் பார்த்தல் ஏதும் கூடாது.
பால் கீழே சிந்திவிட்டால் காலால் மிதிக்கக்கூடாது. அந்த இடத்தை கொஞ்சம் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்துவிடவேண்டும்.
சாப்பிடும்போது தட்டில் அல்லது இலையில் முதலில் சாதம் வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. மற்ற உணவு வகைகள் (சைட் டிஷ்) ஏதும் பரிமாறிய பின்பே சாதம் பரிமாற வேண்டும்.
வடக்குப் பக்கமாகத் தலை வைத்துப் படுக்கக் கூடாது.
பெண்கள் பூஜை செய்யும்போது தலையில் துண்டு கட்டக்கூடாது.
பெண்கள் தலையை விரித்துப் போட்டு வாசற்படி தாண்டக்கூடாது.
பகலில் பாலும் இரவில் கட்டித் தயிரும் உண்பதைத் தவிர்க்கவேண்டும் (நோயாளிகளுக்கு இது பொருந்தாது)
பின் குறிப்பு : எதுவுமே செய்யக் கூடாதென்றால் என்னதான் செய்வது என்று கேட்கலாம். நம்மால் முடிந்ததை மட்டும் கடைப் பிடிக்கலாமே?
(என் நினைவில் இருப்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரிந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே!)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...