Saturday, July 21, 2018

இமைக்கா மனித சிலை அஜீஸ்....

பெயர்: அப்துல் அஜீஸ்
வயசு 54
டியூட்டி டைம் - ஒரு நாளைக்கி 6 மணி நேரம்
இடம் : விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்
30 வருசமா பண்ணிட்டு இருக்காரு இந்த வேலையை...
இவரோட வேலை... கண்களை கூட இமைக்காமல் சிலை போல நிக்கணும் ஒரு நாளைக்கி 6 மணி நேரத்துக்கு.... கடந்த 30 வருசமா இதை பண்ணிட்டு இருக்காரு. இங்க வரும் டூரிஸ்ட்கள் என்னென்னமோ செஞ்சு பாக்குறாங்க... ஜோக் சொல்றது.. பயமுறுத்துறது... ஏன் சில சமயம் சின்ன குழந்தைகள் இவர் உடம்பை டச் பண்ணியோ... கிச்சு கிச்சு காட்டவோ கூட ட்ரை பண்ணுவாங்க... செக்யூரிட்டி இறுக்கத்தால் தப்பிக்கிறார்.
ரிசார்ட் ஓனர் இவரை இமைக்கவோ... உடலில் அசைவுகளை ஏற்படுத்தவோ செஞ்சா அவங்களுக்கு ரூ. 10,000/- பரிசுத்தொகை அறிவிச்சிருக்கார். அப்படி இருந்தும் இதுவரை யாரும் இவரை ஜெயிச்சதில்லை... கண் இமைகளை கூட இமைக்காமல் அவரது டியூட்டி டைம் 6 மணி நேரமும் அப்படியே சிலை போல நிக்கிறார் அஜீஸ்.
இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனை வாயிலில் இருக்கும் ராயல் கார்டுகள் இரண்டு மணி நேரத்திற்க்கு ஒரு முறை ஷிப்ட் மாறுவார்கள்... ஆனால் அஜீஸ் தொடர்ந்து 6 மணி நேரமும் தானே நின்று தான் ஆக வேண்டும்...
இப்படி தொடர்ந்து 6 மணி நேரமாக நின்று கொண்டிருப்பதால் தனது உடலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட தொடங்கியிருப்பதால் விரைவில் ரிட்டயர்மெண்ட் அறிவிப்பது பற்றி யோசிச்சு கொண்டிருக்கிறாராம் இந்த இமைக்கா மனித சிலை அஜீஸ்....
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...