Wednesday, July 18, 2018

முக்தி நிச்சயம்.

உருவ வழிபாடு சிறந்ததா? இல்லையா? என்று காலங்காலமாக விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆறு தலை, பனிரெண்டு கைகள் என்பதெல்லாம் சாத்தியமா? அப்படி எல்லாம் இருப்பதை யாராவது பார்த்திருக்கீறீர்களா என்றெல்லாம் நாத்திகர்கள் நம்மை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள். மனித குலம் இருக்கும் வரை இந்த கேள்விகள் ஜீவித்திருக்கும்.
என்னைப் பொறுத்த வரை விக்கிரக வழிபாடு தேவை என்பதே என் கருத்து. சிறு குழந்தைகளை சரியான வழியில் ஈடுபடுத்தவே விக்கிரக வழிபாடு என்று நம் பெரியோர்கள் வைத்திருக்கிறார்கள். குரங்கு போன்ற உருவமுடைய ஒரு தேவன், யானை முகம் உடைய ஒரு கடவுள், ஆறு முகங்கள் கொண்ட ஒரு கடவுள், புலியின் மேல் அமர்ந்த ஒருவர் என்றெல்லாம் இருக்கும் பொழுது அவை விபரம் தெரியாத சிறு குழந்தைகளுக்கு சட்டென்று மனதில் படிந்து விடும். ஆனை உம்மாச்சியை நினைச்சிக்கோ என்று சொன்னால் உடனே பிள்ளையாரை குழந்தைகள் உருவகப் படுத்திக் கொண்டு விடுவார்கள். இது சுலபமாக வந்து விடும். பிறகு வளர வளரக் கடவுள் என்பது என்ன என்பதை சொல்லிக் கொடுக்கலாம். புரிய ஆரம்பிக்கும்.
கடவுள் என்கிற தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி பதினைந்து அல்லது இருபது வயதில்தான் ஏற்படும். அது வரை? அதற்காகத்தான் விளையாட்டாக சில உருவங்களை மனதில் ஏற்றி வைக்கிறோம். இருபது அல்லது அதற்கும் மேல் வரும் பொழுது நமக்கும் மேல் ஒரு அசைக்க முடியாத சக்தி இருக்கிறது. அது அன்றி அணுவும் அசையாது என்பது நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். எவ்வித உருவமும் இன்றி கடவுளைப் புரிந்து கொள் என்றால், நடுக்கடலில் பிடித்துக் கொள்ள துரும்பு கூட இன்றி தடுமாறுவது போல ஆகி விடும்.
ரஜினிகாந்த் ஒரு மேடையில் சொல்லியது போல, படைக்கப்பட பொருள் நம் கண் முன்னே இருக்கும் பொழுது படைத்தவன் கண்டிப்பாக இருந்துதானே தீர வேண்டும்? இந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ள சற்று தாமதமாகும். அதுவரை வழி தவறிப் போய் விடாமல் இருக்கவே விக்கிரக வழிபாடு, கோவில்கள், பண்டிகைகள் என்று நான் நினைக்கிறேன். சரியா? தவறா?

கோவில்கள் எல்லா இடங்களிலும் வருவதில்லை. பண்டைய காலக் கோவில்கள் அமைந்த இடங்களை ஆராய்ந்தால் அங்கு கண்ணுக்குப் புலப்படாத காந்த சக்தி இருப்பதை உணர முடியும். இந்த சக்தி உடலுக்கும் உள்ளத்திற்கும் உகந்தது. இதனை கோபுரக்கலசம் வழியே சீராக்கி கர்ப்பக்கிரஹத்தில் வருகையில் இந்த சக்தியை உள்வாங்கி அலைகற்றையாய் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இதற்கு கர்பக்ரஹத்தில் உள்ள இறைவனை ப்ரதிஷ்டை செய்கையில் நவதானியம், நவரத்தினம், நவபாஷாண மூலிகைகள் கலவை என பீடத்திற்கு அடியில் இடுவதும் ஒரு காரணம். (விவரமாக பின்னொரு நாளில் பதிவிடுகிறேன்)

கருங்கல் தரையில் நடக்கையில் பாதங்களுக்கு வலிமை கிடைத்து பலம் பெறுகிறது.

இதுதவிர ஸ்தல வ்ருக்ஷம் மஹிமையை சொல்லி மாளாது. இயற்கையாகவே பூமியின் ஒரு பகுதியில் ஏதேனும் குறையிருப்பின் அதனை சமன் செய்வதே ஸ்தல வ்ருக்ஷத்தின் மஹிமை. மனம் தூய்மைபெற்று பாதங்கள் வலுபெற்று ஸ்தலவ்ருக்ஷத்தைப் ப்ரதக்ஷிணம் செய்வதும் உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெறுவதற்கே. சில கோவில்களின் ஸ்தல வ்ருக்ஷத்தில் நமது வேண்டுதலை ஒரு மஞ்சள் துணியில் கட்டி தொங்கவிடு என சிம்பிளாக முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள். 

புத்திர பாக்கியமா... இந்த கோவிலின் ஸ்தல வ்ருக்ஷம்... மன சஞ்சலமா... இந்தக்கோவிலின் ஸ்தல வ்ருக்ஷம் என கூறினார்கள். உள்ளே பதிந்த ஆன்மீக அறிவியல் புரிந்தவர்களுக்கு ஏளனமாகவே தெரியும். நம்பிக்கையோடு செய்யும்போது அந்த வ்ருக்ஷத்தினால் வெளியேறும் மூலிகைக்காற்று தூய்மையான உடலுக்குள் செல்கையில் சக்தி கிடைக்கும்... தெளிவு பிறக்கும். நினைத்த காரியம் கைகூடும் வழி பிறக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...