Monday, July 30, 2018

எங்கோ_போய்க் #கொண்டிருக்கிறது #நம்_சமூகம்??

#Karunanidhi
ஒருவர் உயிருடன் இருக்கும் போதே, அவரை புதைப்பதா எரிப்பதா; எங்கு புதைப்பது எங்கு எரிப்பது; இது போன்ற விவாதங்களும் கலந்துரையாடல்களும் என்னைப் பொறுத்தவரை நாகரீகமற்ற செயல். மனித போர்வைக்கு அடியிலிருக்கும் ( அல்லது புதைக்கப்பட்டிருக்கும்) ஆன்மாவுக்கு நாம் செய்யும் அவமரியாதை.
இது ஒருபுறமிருக்க... கருணாநிதியை அண்ணாவுக்கு நிகரான இடததில் மரீனா கடற்கரையில் புதைக்கப்படுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வந்து கொண்டிருக்கும் சில ஹேஷ்யங்கள் கோபத்தை வரவழைப்பதோடு இல்லாமல் கவலையையும் தருகிறது.
மெரீனா என்ன இடுகாடா. ஒரு தனி மனிதனுக்கு இது மாதிரியான சலுகை கிடைக்குமா இது வரை அங்கு இடப்பட்ட மூவரும் முதலமைச்சராக இருந்த போது அவர்களின் மரணம் நிகழ்ந்ததால் அவர்களகன் பூத உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது என்ற காரணம் கூட என்னைப் பொறுத்தவரை agreeable இல்லை என்றாலும் அரசு protocol படி செய்திருக்கிறது என்றாவது பேசாதிரீக்கலாம். ஆனால் இன்று கருணாநிதிக்காக கேட்கப்படுவது.. அநாகரீகத்தின் மற்றும் அகங்காரத்தின் உச்சகட்டம்....
ஏனோ காமராஜருக்கு அந்த இடம் மறுக்கப்பட்டதாக படித்த சம்பவம் வேறு நினைவுக்கு வருகிறது.
வாழும் போது நினைத்தையெல்லாம் எந்த விதமான தவறான வழியிலும், அதிகார மற்றும் பண துஷ்பிரயோகம் கூட நடத்திக் கொண்ட ஒரு அரசியல்வாதி, தன் வாழ் நாள் முடியும் தறுவாயிலாவது, கடைசியாக, அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும் ... பார்ப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...