Monday, July 30, 2018

ஆதா...ர்...(AADHAR)ஆம் ஆத்மி அதிகார்-(சாதாரண மனிதனின் அதிகாரம்..)

ஆதார்--The Unique Identification Authority of India (UDAI), தற்போது அரசுதொடர்பான பொதுமக்கள் சேவை மற்றும் குடியுரிமை அடையாளம் என்றவகையில் பயன்படுத்தப்பட்டு சமையல் வாயு இணைப்பிலிருந்து குடும்ப அட்டைவரை போலிகளை ஒழித்திருக்கிறது.முறைகேடான
வங்கிப்பணப் பரிவர்த்தனை மற்றும் சேமிப்பில் தில்லுமுல்லுகளை ஒழிக்க பெரும்பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிராய் சேர்மன் R.S.ஷர்மா ஆதார் டேட்டாவை ஒருகாலும் ஹேக் செய்யமுடியாதென சவால்விட்டு தனது ஆதார்நம்பரை டுவிட்டரில் வெளியிட்டு சவால்விட்டார்.
சவால்விட்டதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து அவரது தனிநபர் தகவல்கள் அனைத்தும் ethic hacker என்னும் குற்ற எண்ணமில்லாத IT ஜாம்பவான்களால் வெளியிடப்பட்டது.அத்துடன் அவரது வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் பணமும் டெப்பாஸிட் செய்யப்பட்டது .
இப்போது அவையாவும் ஆதார் டேட்டா பேசிலிருந்து திருடப்பட்டதல்ல ..பல்வேறு இணைய தளம் மூலம் திருடப்பட்டவை என்கின்றனர் டிராய் சேர்மனும் ஆதார் சம்மந்தப்பட்டவர்களும்..
இதன் அர்த்தம்புரியவில்லை. அனைத்து ஆதார் விவரங்களும் வெளிச்சந்தையில் பெற்றுக்கொள்ள இயலும் என்னும்போது சேமிக்கப்பட்ட உங்கள் விவரங்கள் அனைத்தும் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளதெனும் வெற்று விளம்பரம் எதற்கு ?
அவள் ஊரறிந்த விபச்சாரியாயினும் எங்களிடம் கற்புடன் இருக்கிறாள் என்னும் UDAI வாதம் பிடிபடவில்லை..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...