Saturday, July 28, 2018

மரண அவஸ்தை நீக்கும் திருமாகாளம்!

திருமாகாளம் மாகாளேசுவரர் திருக்கோயில்!!
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நீண்ட காலம் வாழவேண்டுமென்ற ஆசை உண்டு. மரணம் என்பதை வேண்டுமென்று வரவேற்பவர் யாரும் உண்டா! நாம் எல்லோருமே வேண்டாம் என்று பதறியடித்து ஓடுபவர்கள் தான். மரண பயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது உயிரை பறித்துக் கொண்டு, மரணத்தைத் தருபவரை எமன் என்று இந்து புராணங்கள் சொல்கின்றன. மரண பயத்தை நீக்கி மனிதர்களுக்கு வாழ்வு தருபவர், முக்கண் பரமனான சிவபெருமான் தான்.
ஆனால் மனிதர்கள் தொண்ணூறு, நூறு வயதுகளைத் தொடும் போது, அவர்களால் சாதாரணமாக வாழ முடிவதில்லை. உடன் இருப்பவர்களுக்கு சுமையாக இருக்கிறார்கள். அதிலும் சிலர் மரணப்படுக்கையில் கிடக்கும் போது, உயிர் இதோ.. அதோ.. என்று பல மாதங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களின் உயிர் உடனடியாகப் பிரிந்து நற்கதி அடைய வேண்டும் என்று, உடனிருப்பவர்கள் வாய்விட்டுச் சொல்லுவதை நாம் பல இடங்களில் கேட்டிருக்கலாம்.
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், அவரது இன்னுயிர் சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
திருமாகாளம் :
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங் களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திருக்கோவிலில் உள்ள மோட்ச லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால், கடைசி காலங்களில் படுத்தப் படுக்கையில் கிடந்தபடி மரண அவஸ்தையில் வாழ்பவர்கள், நிம்மதியாக கண்மூடுவதுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...