1. அநேகமாக மதிமுகவைக் கழட்டி விட்டு விடுவார்கள். ஏனென்றால் மதிமுகவால் திமுகவிற்கு பெரிய அளவில் ஓட்டு கிடைக்கப் போவது இல்லை. தன்னுடைய சொந்த ஊரிலேயே தோற்றுப் போனவர் வைகோ. அது மட்டுமல்ல. மதிமுகவிற்கு என்று எந்த ஓட்டு வங்கியும் தமிழகத்தில் கிடையாது.
2. திருமாவால் இரண்டு அல்லது மூன்று பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு திமுகவிற்கு கிடைக்கலாம். எனவே அவருக்கு ஒரு தொகுதி கண்டிப்பாகக் கிடைக்கும்.
3. காங்கிரசுக்குப் பரவலாக தமிழ்நாடு முழுவதுமே 4 அல்லது 5 சதவிகிதம் ஓட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல திமுகவின் கற்பனையில் அடுத்த பிரதமர் ராகுல்தான். எனவே காங்கிரசை இப்போது பகைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அநேகமாக காங்கிரசுக்கு 5 அல்லது 6 தொகுதிகள் கொடுப்பார்கள்.
4. இதைத் தவிர கம்யுனிசஸ்ட் கட்சிகள் வேறு இருக்கின்றன. சட்டமன்ற தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளலாமே என்று சொல்லிப் பார்ப்பார்கள். ரொம்ப பிடிவாதம் பிடித்தால் மத்திய சென்னை தொகுதி ஒன்று மட்டும் கிடைக்கலாம்.
5. இப்படி எட்டு அல்லது பத்து தொகுதிகள் போக திமுக 30ல் போட்டி போடுவது உறுதி.
6. ஆனால் இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு எல்லா தொகுதிகளிலும் ஓட்டு இருக்கிறது என்று சொல்ல முடியாது. எனவே Vote Transfer ஆகுமா என்பது சந்தேகமே? அப்படியே ஆனாலும் அது மிகவும் குறைவாகவே இருக்க வாய்ப்பு.
இன்றைய தேதியில் திமுகவின் கணிசமான வாக்குகளை தினகரன் அள்ளப் போகிறார் என்பது தெளிவு. எனவே திமுக நினைப்பது போல இந்த தேர்தல் அவ்வளவு சுலபமானது அல்ல.
7. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் எடப்பாடியார் நல்ல பெயரை வாங்கி விட்டார். அது தவிர AIIMSமூலம் பாஜகவின் எதிர்ப்பு சிறிது அடங்கி இருக்கிறது. எனவே அதிமுக, பாஜக அணி அமைந்தால் கண்டிப்பாக வெற்றிதான்.
8. அதிமுக+பாஜக+பு.தமிழகம்+தமாகா+பாமக+தேமுதிக = 30 தொகுதிகள்
திமுக+ காங்கிரஸ் + விசிக = 8 தொகுதிகள்
தினகரன் + கமல் + சீமான் = 1 தொகுதி.
திமுக+ காங்கிரஸ் + விசிக = 8 தொகுதிகள்
தினகரன் + கமல் + சீமான் = 1 தொகுதி.
இது எனது கணிப்பு.
No comments:
Post a Comment