Sunday, November 10, 2019

35 பொருட்களில் 'அக்மார்க்' முத்திரை பயன்படுத்த தடை.

'ஆவின்' நெய் உள்பட 35 நிறுவனங்களின் உணவு பொருட்களில் 'அக்மார்க்' தர முத்திரையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அனுமதி காலம் காலாவதியும் நிறுவனங்கள் புதுப்பிக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விவசாய விளை பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக அக்மார்க் தரச்சான்று உருவாக்கப்பட்டது. இது தொடர்பான சட்டம் 1986ல் திருத்தப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.இதன்படி வகைபடுத்தப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய், நெய், தேன் உள்ளிட்ட 222 வகை பொருட்களுக்கு இந்த சான்று வழங்கப்படுகிறது.

அரசின் பொதுத்துறை தனியார் நிறுவன தயாரிப்புகளுக்கும் இந்த சான்று வழங்கப்படுகிறது. இதை பெறும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பொருளின் மேல் இதற்கான முத்திரை அடங்கிய லேபிளை ஒட்ட வேண்டும். இத்தகைய லேபிள் இருக்கும் பொருட்களை மக்கள் நம்பிக்கையுடன் வாங்குவர்.இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் பொருட்கள் சந்தைப் படுத்துதல் ஆய்வுக்கான சென்னை மண்டல அலுவலகம் பிறப்பித்துள்ள அறிவிப்பு:ஆவின் நெய் உள்ளிட்ட 35 நிறுவனங்களின் பொருட்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அக்மார்க் முத்திரை அனுமதி காலம் மார்ச் 31ல் காலாவதியாகி விட்டது.

இரண்டு நெய் வகைகள், நான்கு எண்ணெய் வகைகள், 18 அரிசி வகைகள் உள்ளிட்ட 35 வகை பொருட்கள் இதில் அடக்கம்.இந்த அனுமதியை புதுப்பிக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்க வில்லை. இதையடுத்து இந்நிறுவனங்கள் தங்கள் உணவு பொருட்கள் விற்பனையில் அக்மார்க் முத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அக்மார்க் முத்திரையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தினால் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது எங்கள் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...