Friday, November 8, 2019

அயோத்தி தீர்ப்பு வழங்கும் 5 நீதிபதிகள் யார்?

 பல ஆண்டுகளாக நீடித்து வரும் அயோத்தி வழக்கில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று வழங்க உள்ளது.






5 நீதிபதிகள் விபரம் :


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் : அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நாட்டின் தலைமை நீதித்துறை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர்.. 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பஞ்சாப், ஹரியானா, கவுகாத்தி உள்ளிட்ட ஐகோர்ட்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றி முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். தேசிய குடியுரிமை பதிவு தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியவர் இவர் தான்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே : ஷரத் அரவிந்த் பாப்டே என்ற இவர், நவ.,17 தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்ற பிறகு அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளவர். மும்பை, மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐகோர்ட்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், 2013 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.




நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் : நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகனான இவர் 2016 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நியமிக்கப்பட்டார். தனியுரிசை சட்டம் உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டு மும்பை சட்ட பல்கலை மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹாமா சட்ட பல்கலை.,களில் கவுரவ விரிவுரையாளராகவும் இருந்து வருகிறார்.

நீதிபதி அசோக் பூஷண் : 1979 ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக தனது பணியை துவங்கிய இவர், 2001 ம் ஆண்டு ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், 2016 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

நீதிபதி அப்துல் நசீர் : கர்நாடக ஐகோர்ட்டில் 20 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 2003 ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாகவும், பின்னர் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியான இவர், முத்தலாக் வழக்கில், தனி நபர் உரிமை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்ற கருத்தை கூறினார்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...