1. உலகில் யாரும் அதி மேதாவியோ அல்லது அடிமுட்டாளோ இல்லை. ஒவ்வொருவரிடமும் புத்திசாலித்தனமும் முட்டாள்தனமும் கலந்தே உள்ளது. விகிதாசாரம் வேறு படலாம்.
2. எந்த இரண்டு நபர்களையும் compare ஒப்பீடு செய்யவேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உள்ளது. குறிப்பாக கணவன் மனைவிமார்கள் தங்கள் வாழ்கை துணையை மற்ற ஆண் பெண்ணுடன் ஒப்பீடு செய்ய வேண்டாம்.
3. நமது நாணயம் வெளிநாட்டில் செல்லாது. அதுபோல நமது செல்வாக்கும் அதிகாரமும் வெளி இடங்களில் செல்லாமல் போகலாம். இதை புரிந்து செயல்படுவோம்.
4. ஒரு காசுக்கு இரண்டு பக்கம் என்பது பழைய கருத்து. மேலிருந்து பார்த்தால் தட்டையான நேர்கோடு, பக்கவாட்டில் பார்த்தால் நீள்வட்டம் என பல கோணங்களில் பல உருவம் காணமுடியும். அதே மாதிரி ஒரே தீர்வு என்றில்லாமல் அதிகமான தீர்வுகளும் உள்ளது.
5. வளையாமல் இருந்தால் முறிக்கப்படலாம். வளைந்தே இருந்தால் மிதிக்கவும்படலாம். ஆகவே வளைவதும் வளையாமையும் நம் சமயத்திற்கு தகுந்தபடி இருக்கட்டும்.
6. மாற்றங்கள் எப்போழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைய தினத்தில் அது முன்பை காட்டிலும் விரைவாக உள்ளது. நான் எனது காலத்திலேயே விறகு அடுப்பு, மண்ணெண்ணை ஸ்டவ், காஸ் அடுப்பு, மின்அடுப்பு, மைக்ரோஅவன் என பலவிதங்களை பயன்படுத்தி விட்டேன்.. மாறுதலுக்கு தயாராக இருப்போம்.
7. வாழ்க்கை ஒரு அநித்தியம். அநித்தியமே வாழ்கை. புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
8. நாம் வழங்கும் அறிவுறைகளும் அன்பளிப்பும் அளவோடு இருக்கட்டும்.
No comments:
Post a Comment