Friday, November 15, 2019

சினிமாக்காரர்கள் யாருடன் யார் போனா , யாருக்கெல்லாம் யாருடனெல்லாம் சண்டைகள்.

எங்கிருந்து செய்தி எடுக்கின்றாய், வரலாற்றை என்பதற்கு மீண்டும் விளக்கம் சொல்கின்றேன்
உங்கள் வீட்டில் உள்ளூர் செய்திதாள் இருந்தாலோ, தமிழக டிவிக்கள் இருந்தாலோ உடனே நிறுத்துங்கள்
ஏன் சொல்கின்றேன் என்றால் ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராக்கேஷ் சர்மா, அவர் எங்கே வசிக்கின்றார் என்றால் ஊட்டியில்தான் வசிக்கின்றார், முன்பும் வங்கபோர் நாயகன் மானக்சா அங்குதான் வசித்தார்
ஒரு தமிழக மீடியா பயலாவது மாவீரன் மானெக்சாவினை பேட்டி கண்டிருப்பான்?
அட இந்த ராக்கேஷ் சர்மா இன்றும் ஊட்டியில் இருக்கின்றார், ஒரு மீடியா வெளிகொண்டுவந்திருக்கும்?
ராக்கேஷ் சர்மா அபிநந்தன் போல விங் கமாண்டராக இருந்தவர், பின் சோவியத் யூனியனால் விண்வெளிக்கு அனுப்பபட்டார்
சர்மாவினை விடுங்கள், கலாமின் அக்னி ஏவுகனை பற்றி ஒரு மீடியா பேசியிருக்கும்? கிரையோஜெனிக் பற்றி ஒரு விவாதம்?
அட நல்ல பொருளாதாரம் பற்றி ஒரு விவாதம்?
சமூகத்தில் பின்பற்றவேண்டிய ஒழுங்குபற்றி ஒரு விவாதம்?
உலக அரசியல் , ராணுவம் , உளவுதகவல், சாகசம் என ஒரு தொடர்? ஒரு விவாதம்?
ஒன்றுமே இல்லை
இங்கு நடக்கும் விவாதமெல்லாம் குப்பைகள், அதில் பங்குபெறுபவன் அதை விட மகா குப்பை அறிவாளிகள்
அந்த குப்பைகளை கிளறினால் குப்பைதான் மிஞ்சும்
இதனால்தான் சொல்கின்றோம் நாலு நல்ல விஷயம் தெரியவேண்டுமென்றால், உலக நிலவரமும் உண்மை ஆன்மீகமும் தெரியவேண்டுமென்றால் தமிழக மீடியாவினை தலைமுழுகுங்கள்
வெற்று சினிமா ஆடல் பாடலும், மாய சீரியலும், வெற்று அரசியல் குப்பைகளும் ஒரு அறிவினையும் உங்களுக்கு தராது, அது சிலரின் வங்கிகணக்கையும், வாக்கு வங்கியினையும் வேண்டுமானால் உயர்த்தலாம், உங்களுக்கு சல்லிக்கும் பிரயோசனமில்லை
இந்த கருமாந்திரங்களை தலைமுழுகுதலே பகுத்தறிவு.
அவை ஆங்கிலத்தில், ஸ்பானிஷில் , பிரெஞ்சில், சீனத்து மொழியில் இருக்கின்றன என்றால் கவலை அடையாதீர்கள், ஈழதமிழரின் பல ஊடகங்கள் நல்ல செய்திகளை தமிழில் தருகின்றன‌
அவற்றை ஆங்கில மீடியாக்களுடன் ஒப்பிட்டால் செய்தியினை உறுதி செய்யலாம், அவை இந்தியாவுக்கு எதிரானவை அல்ல, இங்கு குழப்பம் விளைவிப்பவை அல்ல மாறாக ஒரு உலக செய்தி என்ற அளவிலே இருக்கும்
வேதங்களின் உண்மை மறைபொருளை அதை கற்றறிந்தோர் சமஸ்கிருதத்தில் இருந்து தருவது போல ஈழத்தவர் மேல்நாடுகளின் ஈழ தமிழர் உண்மை பொருளை தருவர்
அது அங்கிள் சைமனின் ஈழ காமெடி போல் இராது, மகா தரமான தரவுகளாய் இருக்கும்
அப்படியே இந்துமத மகத்துவமும் உலகார்ந்த ஆன்மீக ஞானமும் தெரியவேண்டுமென்றால் இந்த கருப்பு சட்டை கோஷ்டிகள் பெரியார் கோஷ்டி பக்கமே செல்லாதீர்கள், கோவில்மாட்டுக்கும் யானைக்கும் ஏன் ஆலயத்து கரப்பான் பூச்சிக்கு இருக்கும் அறிவும் அவர்களுக்கு இருக்காது, அது ஒரு உள் அரசியல் கூட்டம்
கிரிக்கெட்டை பற்றி சச்சின் டென்டுல்கரிடம் கேட்க வேண்டும், கால்பந்து பற்றி மாரடோனாவிடமே கேட்க வேண்டும், விண்வெளி ஓடம் பற்றி நாசாவிடம் கேட்க வேண்டும்
மாறாக கிரிக்கெட் பற்றி வைகோவிடமும், கால்பந்து பற்றி சுபவீரபாண்டியன் மதிமாறன், விண்வெளி ஓடம் பற்றி நாஞ்சில் சம்பத்திடமும் கேட்டால் கதையே மாறிவிடும்
சமஸ்கிருதம் தொடர்பான வேத விஷயங்களை அதை கற்றவர்களிடம் கேட்க வேண்டுமே தவிர பெரியார் வெங்காயங்களிடம் விளக்கம் கேட்டால் குழப்பமே மிஞ்சும்
அந்த கறுப்பு சட்டை திராவிட கோஷ்டிகளிடம் சிக்கினால் உங்கள் அறிவு காஞ்சிபுரத்தையும் ஈரோட்டையும் திருகுவளையினையும் தாண்டாது
அந்த மகா குறுகிய வட்டத்தில் சிக்கி பிராமணம், இந்துமத எதிர்ப்பு என மகா மகா குறுகிய வட்டத்தில் சிக்கி உங்கள் அறிவும் சிந்தனையும் விசாலம் அடையாமலே போகும், உங்களை அறியாமலே ( அறிவு பெறுவதாக எண்ணி) ஏமாந்து போவீர்கள் என்பதுதான் நிஜம்
அதெல்லாம் அரசியல், ஏமாற்றும் மோசடி அரசியலன்றி வேறல்ல
அவர்களுக்கே ஒரு மண்ணும் தெரியாது எனும்பொழுது உங்களுக்கு எப்படி வழிகாட்டுவார்கள்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...