Friday, November 15, 2019

தி.மு.க., பற்றி என்னிடம் கேட்காதீங்க: அழகிரி.

 ''நான், தி.மு.க.,வில் இல்லை. அக்கட்சி விவகாரம் குறித்து, என்னிடம் கேட்காதீங்க,'' என, கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தெரிவித்தார்.

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், நாளை நடக்கிறது.நேற்று, எச்.ராஜா வீட்டிற்கு வந்த அழகிரி, சிந்துஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசு வழங்கினார்.நிருபர்கள் அவரிடம், தி.மு.க., பொதுக்குழு கூட்டம் குறித்து, கேள்வி கேட்னர். அதற்கு அவர், ''நான் திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வந்திருக்கிறேன். பொதுக்குழு பற்றியெல்லாம் தெரியாது,'' என்றார்.தி.மு.க., இளைஞர் அணியில், உதயநிதிக்கு பதவி வழங்கியது குறித்து கேட்டபோது, ''நான் தி.மு.க.,விலேயே இல்லை. என்கிட்ட ஏன் இந்த கேள்வியெல்லாம் கேட்குறீங்க,'' என்றபடியே, கிளம்பி சென்றார்.

 தி.மு.க., பற்றி என்னிடம்  கேட்காதீங்க: அழகிரி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...