திமுக தலைவர் ஸ்டாலின், 'மிசா'வில் கைது செய்யப்பட்டாரா என்ற விவாதம் கிளம்பி உள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை, தி.மு.க., ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பாக அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை திமுக விட்டாலும், அதிமுக விடாமல், ஆதாரங்களுடன் நிரூபித்தே தீருவோம் என அடம் பிடித்து வந்தது. இதுகுறித்த விவாதம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் மகனும், தற்போதைய திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தை, தி.மு.க., அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அக்கடிதம் 1977ம் ஆண்டு நவ.,28 ல், எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சென்னை மத்திய சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்த போது, மகன் ஸ்டாலினுக்கு எழுதப்பட்டது. தனக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியில் (ஸ்டாலின் மகன் உதயநிதி) சிறையிலிருந்து ஸ்டாலினுக்கு கருணாநிதி எழுதிய கடிதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கடிதம்:


இது எப்படி???
இந்நிலையில், கடிதத்தில் தேதி 28/11/77 என குறிப்பிட்டு, 'மத்திய சிறை, சென்னை' என உள்ளது. இதனை கையில் எடுத்த நெட்டிசன்கள், மதராஸ் என்பது, 1996ம் ஆண்டு தான் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடைசியில் மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து விட்டீர்களே என மீம் தயாரித்து அதனை வைரல் ஆக்கி உள்ளனர்.
No comments:
Post a Comment