'அயோத்தியில் ராமர் பிறந்தார் என்ற, ஹிந்துக்களின் நம்பிக்கையில் சந்தேகம் இல்லை; அதில், நீதிமன்றம் தலையிடாது' என, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை விஷயத்திலும், அதே பார்வையில் தீர்ப்பளிக்குமா என, அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கேரள மாநிலம், சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி அய்யப்பன், பிரம்மச்சாரி; அவரை, 10 முதல், 50 வயதிற்குட்பட்ட பெண்கள் தரிசிக்கக் கூடாது என்பது, அந்த கோவில் ஐதீகம்; ஹிந்துக்களின் நம்பிக்கையும் அதுவே. பிற இடங்களில் உள்ள அய்யப்பன் கோவில்களில், அனைத்து வயதினரும் தரிசிக்கலாம். ஆண்டாண்டு காலமாக, சபரிமலை கோவிலுக்கென்று மட்டுமே இருந்த இந்த நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 2018 செப்., 28ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும், சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என, உத்தரவிட்டது.
கேரள மாநிலம், சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி அய்யப்பன், பிரம்மச்சாரி; அவரை, 10 முதல், 50 வயதிற்குட்பட்ட பெண்கள் தரிசிக்கக் கூடாது என்பது, அந்த கோவில் ஐதீகம்; ஹிந்துக்களின் நம்பிக்கையும் அதுவே. பிற இடங்களில் உள்ள அய்யப்பன் கோவில்களில், அனைத்து வயதினரும் தரிசிக்கலாம். ஆண்டாண்டு காலமாக, சபரிமலை கோவிலுக்கென்று மட்டுமே இருந்த இந்த நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 2018 செப்., 28ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும், சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என, உத்தரவிட்டது.
மறுபரிசீலனை
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வாதாடியதையும், உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த, கேரள அரசு தீவிரம் காட்டியது. அரசின் திட்டமிட்ட ஏற்பாட்டில், இளம் வயது பெண்கள் இருவர், கோவிலில் தரிசனம் செய்தனர். மேலும் சில பெண்கள், கோவிலுக்கு வந்து, பக்தர்களின் எதிர்ப்பால், பாதி வழியில் திரும்பிச் சென்றனர். சபரிமலையிலும், செல்லும் வழியிலும், பெரும் போராட்டங்கள் நடந்தன. சட்டம்- - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கார்த்திகை மாதம், பக்தர்கள் நிம்மதியாக, சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.
கேரள மார்க்சிஸ்ட் அரசு மீது இருந்த, பக்தர்களின் கோபத்தால், லோக்சபா தேர்தலில், அக்கட்சி கூட்டணி, படுதோல்வி அடைந்தது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து, கோவில் வருமானமும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
'நாயர் சர்வீஸ் சொசைட்டி, பீப்பிள் பார் தர்மா' போன்ற பல அமைப்புகள், மனு தாக்கல் செய்திருக்கின்றன. அயோத்தி வழக்கில் வாதாடி, ராம் லல்லா தரப்பிற்கு வாதாடிய, மூத்த வழக்கறிஞர் பராசரன், வைத்தியநாதன் ஆகியோர் தான், பீப்பிள் பார் தர்மா அமைப்பிற்காகவும் வாதாடியுள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 17ல் ஓய்வு பெற உள்ளதால், சபரிமலை மறு சீராய்வு மனுவும், அதற்கு முன்பு பரிசீலிக்கப்பட உள்ளது. மறுசீராய்வு மனு என்பதால், வாதங்கள் ஏதும் இன்றி, அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கும்.
அயோத்தி வழக்கில், ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு, நீதிபதிகள் மதிப்பளித்துள்ளனர். தீர்ப்பில், 'ராமபிரான், அயோத்தியில் தான் அவதரித்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையில், எந்த சந்தேகமும் இல்லை. 'இதை, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை, உச்ச நீதிமன்றம் மதிக்கிறது' என, ஒருமித்த கருத்தில், நீதிபதிகள் கூறியுள்ளனர். அயோத்திக்கு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோரே, சபரிமலை வழக்கிலும் தீர்ப்பளிக்க உள்ளனர்.
பங்கம் ஏற்படும்
ஹிந்து வழக்கப்படி, சபரிமலை சன்னிதானத்தில் அருள்பாலிக்கும் அய்யப்பன், நைஷ்டிக பிரம்மச்சாரி. அவரை, அனைத்து வயது பெண்களும் தரிசித்தால், கோவிலில் நிலவும், ஐதீகத்திற்கு பங்கம் ஏற்படும் என்பது, நம்பிக்கை. எனவே, ஹிந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை பரிசீலிக்குமா அல்லது பாலின சமத்துவம் என்ற அடிப்படையில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவே செல்லும் என அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அயோத்தி தீர்ப்பை முன்னுதாரணமாக வைத்து, சபரிமலைக்கும் தீர்ப்பு கிடைக்கும் என, அய்யப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
No comments:
Post a Comment