Saturday, November 9, 2019

இதன் பெயர்தான் மூடநம்பிக்கை ....சுடுகாட்டில் யாராவது கல்யாணம் செய்வார்களா?

இன்று கருணாநிதியின் பூத உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார் , அது அவர்களின் தனிப்பட்ட விசயம், வெள்ளைகாரன் ஊரில், கடலுக்கு அடியிலும் ... வானத்தில் குத்தித்து கொண்டே எல்லாம் திருமணம் செய்து கொள்வது சகஜம் ..
அதற்க்கு அவரது கட்சியின் பக்கத்தில் குடுத்திருக்கும் விளக்கம் ஆகா .. அருமை ..
==================
https://www.facebook.com/…/a.20090438994…/2741234452574022/…
======================
"இன்றைக்கு (8.11.2019) நடைபெற்ற அந்த எளிமையான, சுயமரியாதைத் திருமணம் என்பது, மேலும் மகிழ்ச்சி கூட்டிடும் ஒரு விழாவாக நடைபெற்றது. காரணம் அது நடைபெற்ற இடம், வீடோ மண்டபமோ அல்ல. ஆலயம் என்று சொல்லலாம். ஏனென்றால், வங்கக்கடற்கரையில், தன்னுடைய தங்கத்தலைவர் பேரறிஞர் அண்ணா உறங்குகின்ற இடத்திற்குப் பக்கத்திலே ஓய்வு கொள்ளா நம் தலைவர் ஒய்வு கொள்கிறாரே, அந்த இடத்திலேதான்"
ஆம் அன்பர்களே கருணாநிதி ஒரு மாபெரும் அரசர் அவர் பள்ளிபடுத்தப்பட்ட (உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் ) புனிதமாக ஒரு பள்ளிபாடை எனப்படும் மேலே ஒரு லிங்கம் வைத்து வணங்க கூடிய ஒரு ஆலயம் என்பதாக அவரின் மகனே சொல்லி விட்டார் ..
தினமும் சொடஷ அலங்காரம் (16 வித அலங்காரம்) பூ அலங்காரம் .. தளிகை .. தயிர் வடை .. பஞ்சாங்க படனம் (முரசொலி பத்திரிக்கை ) .. மற்றும் பஜனை கோஷ்டிகள் ...நடைபெறுகிற இடமல்லவா !!!!
இன்று திருமணம் நடை பெற்றும் பரிபூரண புனித தக்ஷிணாமூர்த்தி ஆலையமாக பரிமளித்து விட்டது ..
இங்கே ஒரு லிங்கத்தை வைத்து ஒரு ஐம்பது ஆண்டுகளில் ஒரு பெரிய ஆலயம் எழுந்தாலும் ஆட்சரியப்படுவதர்க்கு இல்லை ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...