Sunday, November 10, 2019

எவ்வளவு பெரிய மனது!

செங்கோடன் வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.அவர் ₹80,000 கட்ட வேண்டி இருந்தது.ஆனால் அவரால் கட்ட முடியவில்லை.வங்கி அதிகாரிகள் அவரது கிராமத்துக்கு வந்தனர்.வந்தவர்களை செங்கோடன் நன்கு உபசரித்தார். மழை இல்லை .அதனால் இந்த இன்ஸ்டால்மெண்ட் கட்ட தாமதம் ஆகிறது என்றார். அதிகாரிகள் திரும்பி சென்றனர். அவர் மனைவி தன்னிடம் இருந்த நகைகள் அனைத்தும் கொடுத்து கடனை அடைக்க சொல்ல,அவரும் அவைகளை விற்று பணமாக்கி முழுக்கடனையும் அடைக்க வங்கிக்கு வந்தார்.அப்போது ஒரு பெரிய தொழில் அதிபர் அங்கு வந்திருந்தார்.அவர் பெயர் ஆறுமுகம்.அவர் செங்கோடன் காலில் விழுந்து வணங்கினார்.வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.ஆறுமுகம் சொன்னார்,"சோத்துக்கு வழியில்லாமல் கிடந்த என்னை சோறு போட்டு படிக்கவும் வைத்த பெருந்தகை இவர்.நானே இவர் கடன் முழுவதையும் கட்டிவிடுகிறேன் "என்றார்.செங்கோடன் சொன்னார்,"ஆறுமுகம்!நீ பெரிய தொழில் அதிபராக இருப்பது குறித்து சந்தோஷம்.நீ எனக்காக பணம் கொடுத்து உனக்கு என்னை கடனாளி ஆக்கி விடாதே!என் கடனை நானே அடைப்பதுதான் முறை." என்று சொல்லி தான் கொண்டு வந்த பணத்தை வங்கியில் கட்டி முழுக் கடனையும் அடைத்தார். எவ்வளவு பெரிய மனது! keட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...