'சபரிமலை வழக்கு, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு மண்டல பூஜையின் போது, 10 முதல், 50 வயது வரையிலான பெண்களை, சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, கேரள அரசுக்கு, அம்மாநில அட்வகேட் ஜெனரல் ஆலோசனை வழங்கி உள்ளார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 முதல் 50 வயது பெண்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களும், பாகுபாடின்றி சபரிமலை கோவிலுக்கு செல்லலாம்' என, கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 முதல் 50 வயது பெண்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களும், பாகுபாடின்றி சபரிமலை கோவிலுக்கு செல்லலாம்' என, கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஏம்.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர், இந்த வழக்கை, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரித்துரை செய்தனர். மற்ற இரு நீதிபதிகளான ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம், இன்று முதல் துவங்குகிறது.
இதையடுத்து, பக்தர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்டவை, மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செய்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், இந்த வழக்கை, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிக்கும் வரை, அனைத்து சீராய்வு மனுக்களும் நிலுவலையில் இருக்கும்' என்றனர்.
கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. இதனால், 'இந்த மண்டல பூஜையின் போது, சபரிமலை கோவிலுக்கு வருவோம்' என, சில பெண் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில், சட்ட ஆலோசனை பெற, கேரள அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனை, அம்மாநில அட்வகேட் ஜெனரல் நேற்று சந்தித்து பேசினார். முதல்வரின் சட்ட ஆலோசகர் என்.கே.ஜெயகுமாரும் உடனிருந்தார். அப்போது, 'சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
அதனால், அந்த விசாரணை முடிவடையும்வரை, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பினை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை' என, அட்வகேட் ஜெனரல் ஆலோசனை வழங்கியதாக, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிடமும், ஆலோசனை பெற, முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு அனுமதியில்லை அமைச்சர் திட்டவட்டம்!
'சபரிமலை கோவிலில், இந்த மண்டல பூஜையின் போது, அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்களா?' என, தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவு வரும் வரை, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 - 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிலுக்குள் சென்றே தீருவேன் என பிடிவாதம் பிடிப்பவர்கள், உச்ச நீதிமன்றத்தில் இருந்து, அனுமதி உத்தரவு வாங்கி வர வேண்டும். திருப்தி தேசாய் போன்ற பெண் சமூக ஆர்வலர்கள், தங்களின் தனிப்பட்ட விளம்பரத்திற்காக, இந்த விவகாரத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். அவர்களைப் போன்ற ஆட்களுக்கு, பக்தி என்பது துளியும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
'மாறுபட்ட உத்தரவை படியுங்கள்'
சபரிமலை விவகாரத்தில், நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில், மாற்று கருத்து தெரிவித்த இரு நீதிபதிகளில் ஒருவரான, நீதிபதி கே.எப். நாரிமன், நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் வழங்கப்பட்ட மாறுபட்ட உத்தரவு, மிக முக்கியமானது. அதை, மத்திய - மாநில அரசு மற்றும் அதிகாரிகள் நிச்சயம் படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment