Wednesday, November 13, 2019

தேர்தலில் சிவாஜி தோற்றது ஏன்?: இளங்கோவன்.

''பதவி பெரிதல்ல; கொடுத்த வாக்கு தான் பெரிது என, சிவாஜி நினைத்ததால் தேர்தலில் தோல்வியுற்றார்,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

சிவகாசியில் நேற்று அவர் கூறியதாவது: நடிகர் சிவாஜி கணேசன் பற்றி, முதல்வர் இ.பி.எஸ்., மோசமாக பேசியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, அவரது மனைவிக்கு, தேர்தலில் ஆதரவு கொடுத்ததால், சிவாஜிக்கு சரிவு ஏற்பட்டது.அன்று, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்தால், சிவாஜி மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பார். பதவி பெரிதல்ல; கொடுத்த வாக்கு தான் பெரிது என, சிவாஜி நினைத்ததால் தேர்தலில் தோல்வியுற்றார். நாங்குநேரி தொகுதியில், அ.தி.மு.க., ஓட்டுக்கு பணம் கொடுத்ததால், காங்., தோல்வியுற்றது. காங்கிரசில், உள்ளூர் ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெளியூர் ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் தோல்விக்கு காரணம். ஒட்டுமொத்தமாக, எங்கள் வேட்பாளர் தேர்வே தவறு.நடிகர் ரஜினி, கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார். அரசியலுக்கு வரக் கூடிய தைரியம், ரஜினிக்கு இல்லை. தேனி தொகுதியில், 350 கோடி ரூபாய் செலவு செய்து, மகனை வெற்றி பெற வைத்து, உலக சாதனை செய்ததால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் பட்டம் கொடுத்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.***

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...