இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.அண்டை நாடான இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான அனுரா குமாரா திசநாயகவும் இவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளார். இன்று காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இதில் 1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவுள்ளனர்.

இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சஜித் பிரேமதாசா முன்னாள் அதிபரான மறைந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன். கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர். ராஜபக்சே அதிபராக இருந்தபோது கோத்தபய ராணுவ அமைச்சராக இருந்தார்.தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment