Thursday, January 9, 2020

புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கொறடா திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி:

அமைதியான நகரம், ஆன்மிக நகரம், சுற்றுலா நகரம் என புதுச்சேரிக்கு பல முகங்கள் இருந்தது. ஆனால் தற்போது நிர்வாக சீர்கேட்டில் சிக்கி, சீரழிந்து கிடக்கும் நகரமாக புதுச்சேரி நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. ஒவ்வொரு நகரத்திலும் எங்கள் ஊருக்கு சுற்றுலா வாருங்கள் என விளம்பரப்படுத்தி பயணிகளை ஈர்த்து வருகின்றனர். ஆனால் புதுச்சேரிக்கு விரும்பி வரும் பயணிகள் வேதனையோடுதான் திரும்புகின்றனர். உலகமே புத்தாண்டை வரவேற்க வண்ண விளக்குகளால் நகரை அழகுபடுத்தி வைத்திருக்க, புதுச்சேரி மட்டும் அமங்கலமாக காட்சியளித்தது. இதற்கு முழு காரணம் புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்கேடுதான். இனிமேல் புதுச்சேரிக்கு புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் யாரும் வரப்போவதில்லை. இந்நிலையில் தற்போது புதுச்சேரியின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. முதல்அமைச்சர், அமைச்சர்கள், வாரிய தலைவர்கள், அரசு செயலர், இயக்குனரின் வாகனங்கள் அரசுத்துறை வாகனங்களுக்கு டீசல் வாங்கிய தொகையை கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு செலுத்தவில்லை. இதனால் அரசுத்துறை வாகனங்களுக்கு டீசல் வழங்க முடியாது என அமுதசுரபி அறிவித்துள்ளது. இது புதுச்சேரி அரசு நிர்வாக சீர்கேட்டின் உச்சகட்டம். கல்வித்துறை அமைச்சர் தனது காருக்கு டீசல் வழங்காததால் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். உண்மையில் எளிமையை கடைபிடிக்க நினைத்திருந்தால் பாராட்டுக்குரியது. ஆனால் அமைச்சர் பஸ்சில் பயணித்தது அரசின் செயல்படாததன்மையையே காட்டியுள்ளது.
இதைவிட சீரழிந்த அரசு வேறு எதுவும் இருக்க முடியாது. நிர்வாகம் நடத்த தெரியாத, திறமை, திராணியற்ற காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு இனி ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க அருகதையே இல்லை என்பதையே இந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது. சிறந்த நிர்வாகம் என வாய் கிழிய பேசும் முதல்அமைச்சர் நாராயணசாமி ஏன் கூட்டுறவு நிறுவனங்களிடம் பெற்ற டீசலுக்கான தொகையை செலுத்தவில்லை? ஆட்சியில் உள்ளவர்களே இவ்வாறு நடந்து கொண்டால் கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்திற்கு செல்லாமல், லாபத்தை நோக்கியா செல்லும்? அமைச் சர்கள், அதிகாரிகள் தங்கள் சொந்த பணத்தில் டீசல் வாங்கி ஊர் சுற்றலாம். ஆனால் நோயாளிகள் என்ன பாவம் செ ய்தார்கள்? ஆம்புலன்சிற்கு கூட டீசல் வழங்க முடியாத அவலநிலைக்கு யார் காரணம்? இவை அனைத்திற்கும் நிதி இல்லை, மத்திய அரசு காரணம், துணை நிலை ஆளுநர் காரணம் என முதல்அமைச்சர் நாராயணசாமியின் பொய்யான வாய் ஜம்பம் இனியும் மக்களிடம் பலிக்காது. புதுச்சேரியில் கடுமையான நெருக்கடி சூழ்நிலை நிலவுவதால் ஜனாதிபதி ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். உண்மையிலேயே மனசாட்சி இருந்தால் ஆம்புலன்சுக்கு கூட டீசல் வழங்க முடியாததற்கு பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு முதல்அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த செய்தியை தங்கள் மேலான நாளிதழ்/ஊடகத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...