தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒரு கப்,
புளிக்கரைசல் - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 5,
வெல்லம், கடுகு, சீரகம் - தலா அரை டீ ஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
மசாலா தயாரிக்க:
தேங்காய்த் துருவல் - அரை கப்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டு - 5 பல்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
செய்முறை:
சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியம் ஆறவைத்து அதனுடன் தனியா, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், வெல்லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.

தக்காளி - ஒன்று

No comments:
Post a Comment