Friday, January 10, 2020

குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமல்.

குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா, பார்லிமென்ட்டில் சமீபத்தில் நிறைவேறியது.



ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, இது சட்டமானது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை, அரசிதழில், மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன் மூலம், இச்சட்டம், நேற்று இரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...