Friday, January 10, 2020

உள்ளாட்சி பதவி பங்கீட்டில் சண்டை; திமுக - காங்., கூட்டணியில் முறிவு?

ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் போட்டியிட, காங்கிரசுக்கு வாய்ப்பு தராத காரணத்தினால், அக்கட்சி, தி.மு.க., மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. 'இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பான செயல்' என, காங்கிரஸ் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு, 'வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவது நல்லதல்ல' என, தி.மு.க., பதிலடி கொடுத்துள்ளது. இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளை, குறைந்த எண்ணிக்கையில், காங்கிரஸ் கைப்பற்றியது. இன்று நடைபெவுள்ள ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான, மறைமுக தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும், தி.மு.க.,வை கண்டித்து, நேற்று அறிக்கை வெளியிட்டனர்.

அறிக்கை விபரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல், மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது என, தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு, மாவட்ட அளவில், எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. தி.மு.க., தலைமை அறிவுறுத்திய இடங்களில் கூட, காங்கிரசுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில், இதுவரை, இரண்டு இடங்கள் மட்டும், தி.மு.க., தலைமையால் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தம், 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ, இதுவரை வழங்கப்படவில்லை. இது, கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Congress,DMK,LocalBodyElection,காங்கிரஸ்,திமுக,திராவிட_முன்னேற்றக்கழகம்

இவர்களின் அறிக்கைக்கு, பதிலடி தரும் வகையில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., அளித்த பேட்டி: தி.மு.க., சார்பில், காங்கிரசுக்கு முழு ஒத்துழைப்பு தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், இடபங்கீடு பேச்சில் முடிவு கிடைக்கவில்லை. அங்கு தனியாக, காங்கிரசார் போட்டியிட்டனர்.பிரச்னை இல்லாமல், யாருக்கு வெற்றி இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெற்று வரட்டும் என, தலைவர்கள் பேசி முடிவெடுத்தனர்.

இப்போது, திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளனர். எந்த மாவட்டத்தில், எந்த பதவிக்கு என, அவர்கள் ஆதாரத்துடன் சொல்லியிருந்தால், பேசுவதற்கு வசதியாக இருக்கும். ஆனாலும், வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவது நல்லதல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...