Friday, January 10, 2020

தி.மு.க., பெண் கவுன்சிலர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்.

தேனி மாவட்டம் சின்னமனுார் ஒன்றிய முதல் வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயந்தி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்.

சின்னமனுார் ஒன்றியத்தில் உள்ள 10ல் 6 வார்டுகளில் தி.மு.க. வென்றது. தலைவர், துணைத்தலைவர் பதவிகளை அக்கட்சி சுலபமாக கைப்பற்றும் நிலையிருந்தது. ஜன. 6ல் ஒன்றியத்தில் பதவியேற்ற பின் தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் ஒரே வாகனத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயந்தி வாகனத்தில் ஏற மறுத்தார். போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு சென்றவரை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சந்திக்க முடியவில்லை. நேற்று முன்தினம் அதிகாலையில் அவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.

இந்நிலையில் சென்னையில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை ஜெயந்தியும் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் தலா 5 கவுன்சிலர்களுடன் சமபலத்தில் இருப்பதால் ஜன. 11ல் நடைபெறவுள்ள ஒன்றிய தலைவர் துணைத்தலைவர் தேர்தலில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

 தி.மு.க., பெண் கவுன்சிலர்  அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...