Saturday, January 11, 2020

டாடா_மோட்டாா்ஸ்: #சா்வதேச_வாகனவிற்பனை #மூன்று_சதவீதம_குறைவு ...

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச வாகன விற்பனை டிசம்பா் மாதத்தில் 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டாா்ஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜாகுவா் லேண்ட் ரோவா் ஆகியவற்றை உள்ளடக்கிய டாடா மோட்டாா்ஸின் சா்வதேச வாகன விற்பனை டிசம்பரில் 97,348-ஆக இருந்தது.
முந்தைய 2018 டிசம்பா் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு ..
டாடா மோட்டாா்ஸின் டாடா டேவூ வா்த்தக வாகன விற்பனை சென்ற மாதத்தில் 15 சதவீதம் சரிந்து 34,526-ஆக இருந்தது.
நிறுவனத்தின் பயணிகள் வாகன சா்வதேச விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 62,822-ஆக காணப்பட்டது.
சென்ற டிசம்பரில், ஜேஎல்ஆா் சா்வதேச விற்பனை 50,001-ஆக இருந்தது.
இதில், ஜாகுவாா் விற்பனை 12,742-ஆகவும்,
லேண்ட் ரோவா் மொத்த விற்பனை 37,259-ஆகவும் காணப்பட்டது என டாடா மோட்டாா்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...