Saturday, January 11, 2020

" அர்த்தநாரீஸ்வரர் "

அர்த்தநாரீஸ்வரர், சிவனும், பார்வதியும் ஒரே உருவாய் சேர்ந்த அருள்பாலிக்கும் தோற்றமாகும். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தி இல்லையேல் சிவனில்லை என்ற விளக்கத்தை அளிக்கும் கூற்றாகவும் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் விளங்குகிறது.
சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாகவும், தனித்தன்மை உடையதாகவும் திகழ்கிறது. ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, வாழ்வியல் ரீதியாகவும் கூட, ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் என்ற வாழ்க்கை சாத்தியமற்றது என்பதை விளக்கும் விதமாகவும் திகழ்கிறது அர்த்தநாரீஸ்வரர் அவதாரம்.
அர்த்தநாரீஸ்வரர் எனும் பெயர் மட்டுமின்றி வேறு சில பெயர்களும் இருக்கின்றன. 1) உமையொரு பங்கன் 2) மங்கையொரு பாகன் 3) மாதொரு பாகன், என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.
அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்; நாரி என்றால் பெண் என்று பொருள். சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி+ ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...