Saturday, May 1, 2021

"இத்தனை வயதாகியும் பக்குவமே இல்லாமல் இருந்தால் உங்க கட்சி கூட உங்களை ஓரம் கட்டி விடும்..."

 தொலைநோக்குடன் நேரு உருவாக்கிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை, ஆக்சிஜன் இல்லாமல் மூடியது தான் மோடி அரசின் சாதனை. ஆட்சி என்பது அதிகாரம் மட்டுமல்ல. மக்கள் மீதான அக்கறை, தொலைநோக்கு, ஆளுமைத்திறன். இது எதுவுமில்லாத கொடுங்கரங்களில் சிக்கி, இந்தியா சீரழிகிறது.

- கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி


பேச்சு_பேட்டி_அறிக்கை, காங்கிரஸ், ஜோதிமணி

'ஆக்சிஜன் தேவை அதிகரித்ததன் காரணம் என்ன... கொரோனாவை தவிர்க்க மக்கள் முன்னெச்சரிக்கையாய் இல்லாமல் இருந்தது தானே... இத்தனை வயதாகியும், சிந்தனையில் பக்குவமே இல்லாமல் இருந்தால், வருங்காலங்களில் உங்க கட்சி தலைமை கூட, உங்களை ஓரங்கட்டி விடும்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை



கொரோனாவால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன்


'இது வாஸ்தவமான பேச்சு... இதை விட்டுட்டு, கூட்டணி தலைமை உயிரோடு இருந்தபோது, தேர்தலில் வெற்றி பெற இலவசம் அறிவிச்சப்ப, வாய் மூடி மவுனம் காத்தது நியாயமே இல்லை...' என, நினைவுபடுத்த துாண்டும் வகையில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை



latest tamil news


கொரோனா பற்றி, 'பேனிக்' எனப்படும் பதற்றம் அடைய வேண்டாம் என, மத்திய, பா.ஜ., அரசு, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அப்போ, 'பிக்னிக்' போகலாமா?
- காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்


'உங்க கட்சி கரூர் எம்.பி., ஜோதிமணி லெவலையும் தாண்டி, நீங்க ரொம்ப கீழே இறங்குறீங்களே... இந்த, 75 வயசுல, உங்களுக்கு, 'பிக்னிக்' தேவைப்படுதோ...' என கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை



தமிழகத்தில், கடந்த, 10 ஆண்டுகளாக, ஊரக வேலை வாய்ப்பு திட்டம் சிதைக்கப்பட்டு விட்டது. பயனாளிகளுக்கு அற்ப சொற்ப நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதுவும், தேர்தலுக்கு முன் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
- விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர்


'சங்கம் அமைச்சு, அதில் தலைவர் பதவியையும் வாங்கிட்டு, அந்தச் சலுகைகளை அனுபவிக்க தான் பலரும் ஆளாய் பறக்குறாங்க... மத்தபடி, வேலையை ஒழுங்கா செய்யணும்ங்கிற நேர்மை யாரிடமும் இல்லைங்கிற குற்றச்சாட்டு இருக்கே... அது பத்தி உங்க கருத்து என்ன...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் அறிக்கை



தேர்தலில் நடிகர் கமல் வெல்வது உறுதி. அவர் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவரை பணத்தால் அடித்தாலும், படையால் அடித்தாலும் வெற்றி பெறுவது அவர் மட்டுமே.
- ம.நீ.ம கட்சியின் வேட்பாளர் சினேகன்


'மதி மயக்கம் ஓயட்டும்... மனதில் நீதி பிறக்கட்டும்...' என, கமல் மொழியிலேயே சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் பாடலாசிரியருமான சினேகன் பேட்டி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...