உன் கை பட்டதெல்லாம்
இசைக்கும் கருவியாகும்
உன் விரல் தொட்டதெல்லாம்
இசை அருவியாகும்
நீ போட்ட ராகமெல்லாம்
நெஞ்சை வருடும் காணமாகும்
உன் குரல் கேட்கும் நேரம்
சோகம் மக்கி மண்ணாய் போகும்
நீ தந்த நாதமெல்லாம்
நெஞ்சறையில் குடிவாழும் காத்தெல்லாம் கலந்து போகும்
ராஜா உந்தன் கீதம் யாவும்
கேட்க கேட்க தெவிட்டாது
தேனூறும் மாயமாகும்
எங்கிருந்து வந்த தய்யா
இசையை படைக்கும் உன் ஞானம்
இசைஞானி ஹ்ம் என்றால்
மெளனம் கூட இசையாகும்
தானாக இடம் மாறும்
உன் தாளம் கேட்ட கால் யாவும்
பாட்டுக்கு பாட்டு போட்டு
நீ தந்த வித்தியாசம்
இதுவரைக்கும் மாறவில்ல
உன்னோட அத்தியாயம்
ஆறாத மனக்காயம்
உன் பாட்டாலே குணமாகும்
கரையாத கருங்கல்லும்
உன் தாளத்தால் தவிடாகும்
அசையாத விசை கூட
உன் இசையால ஜதியாடும்
நீ தந்த இசை போதும்
அகிலமே அசைந்தாடும்
இயற்கையும் இளையராஜாவும்
ஒன்றோடு ஒன்றாகும்
என்னாளும் ராஜாவாய்
உன் பாட்டு எமை ஆளும்.

No comments:
Post a Comment